சென்னை: கோயம்புத்தூரில் பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் காலம் என்பதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இன்று கூட அவர் கன்னியாகுமரிக்கு வந்து அங்கு நடந்த பாஜக கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அடுத்து அவர் வருகிற திங்கள்கிழமை கோவைக்கு வரவுள்ளார்.
கோவை வரும் பிரதமர் மோடி, அங்கு 4 கிலோமீட்டர் தொலைவுக்கு ரோடுஷோ நடத்த திட்டமிட்டுள்ளது பாஜக. இதுதொடர்பாக அனுமதி கோரி மாவட்ட காவல்துறையிடம் பாஜக சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அனுமதி மறுத்தது கோவை காவல்துறை. கோவையில் வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளதால் ரோடுஷோவால் பாதுகாப்பு பிரச்சினைகள் எழலாம் என்று காவல்துறை கூறியிருந்தது.

இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகி அனுமதி கோரி மனு செய்தது கோவை மாவட்ட பாஜக. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் கூறுகையில், கோவையில் எந்த அரசியல் கட்சிக்கும் இதுபோன்று ரோடுஷோ நடத்த அனுமதி தரப்படுவதில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு அனுமதி மறுக்கப்படுகிறது. யாரையும் குறிப்பிட்டு பாரபட்சமாக காவல்துறை நடக்கவில்லை என்று விளக்கம் தரப்பட்டது.
விாசரணைக்குப் பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிரதமருக்கு ஏற்கனவே சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகல் இருப்பதால் காவல்துறைக்கு இதில் பெரிதாக வேலை இருக்கப் போவதில்லை. எப்போது பேரணி நடத்தலாம், எவ்வளவு தூரத்திற்கு நடத்தலாம் என்பது குறித்த விவரங்களை காவல்துறையே தீர்மானித்து தெரிவிக்கலாம் என்று கூறி உத்தரவிட்டார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}