நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்.. மனுவும் டிஸ்மிஸ்.. ஹைகோர்ட் அதிரடி

Dec 22, 2023,05:17 PM IST

சென்னை: நடிகைகள் திரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கை ஹைகோர்ட் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும் அவருக்கு ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.


நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் வார்த்தைகளை விட அது பெரிய பிரச்சினையானது. பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். திரிஷாவும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்றது.


விசாரணைக்குப் பின்னர் திரிஷாவிடம் மன்னிப்பு கோரி கடிதம் வெளியிட்டார் மன்சூர் அலிகான். அவரும் மன்னித்து விட்டதாக டிவீட் போட்டார். இந்த நிலையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, திரிஷா, சிரஞ்சீவி, குஷ்பு ஆகியோர் என்னுடைய பேட்டியை முழுசா பார்க்காமல் அவதூறாகப் பேசி விட்டனர் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சதீஷ் குமார், பெண்கள் குறித்து பொது வெளியில் இப்படித்தான் பேசுவதா.. இப்படிப் பேசினால் அவர்கள் எதிர்த்துக் கருத்து கூறத்தானே செய்வார்கள். உண்மையில் திரிஷாதான் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும்.  இதுபோன்ற செயல்படக் கூடாது என்று எச்சரித்திருந்தார்.




இந்த நிலையில் இன்று மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அதைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார். நேரத்தை வீணடிக்கும் வகையிலும், விளம்பரம் தேடும் நோக்கிலும் இந்த மனுவை மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ. 1லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை அடையார் புற்று நோய் மருத்துவமனைக்கு 2 வாரத்தில் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


இது தேவையா மன்சூர்!

சமீபத்திய செய்திகள்

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

news

கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

news

Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!

அதிகம் பார்க்கும் செய்திகள்