சென்னை: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு வருகிற லோக்சபா தேர்தலில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கக் கோரி அக்கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மறைந்த ஜி.கே.மூப்பனார் உருவாக்கிய கட்சிதான் தமிழ் மாநில காங்கிரஸ். அக்கட்சி உருவானபோது அக்கட்சிக்கு சின்னமாக சைக்கிள் ஒதுக்கப்பட்டது. முதல் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற தமாகா காலப் போக்கில் கரைந்து போய் விட்டது. மூப்பனார் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் ஜி.கே.வாசன் கட்சித் தலைவரானார். ஆனால் கட்சியை நடத்த முடியாமல் அவர் இடையில் காங்கிரஸில் சேர்ந்து மாநிலத் தலைவராக செயல்பட்டார். பின்னர் அதிலிருந்து வெளியேறி மீண்டும் தமாகாவை உயிர்ப்பித்து நடத்தி வருகிறார்.
தொடர் தோல்விகள் காரணமாக கட்சியின் தேர்தல் சின்னம் தமாகாவுக்குக் கிடைக்கவில்லை. புதிய புதிய சின்னமே அக்கட்சிக்குக் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் வருகிற லோக்சபா தேர்தலில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்குமாறு கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவில், எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்ததாக கூறியுள்ளார். அடுத்த நான்கு வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம் என்ற நிலையில், தங்களது மனு இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலை போல இந்த தேர்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார் ஜி.கே.வாசன். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பதில் மனு தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}