சென்னை: விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்கக் கூடாது. விவாகரத்து வழக்குகளில் காணொலி காட்சி மூலம் ஆஜராக வாய்ப்பளிக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதிகள் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் விவகாரத்து பெற நினைத்துள்ளனர். இந்நிலையில் பரஸ்பரம் விவாகரத்து வழங்கக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக இந்தியா வர நினைத்த தம்பதிகள் விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சென்னை வர முடியாமல் போகியுள்ளது. இதனால், காணொலி காட்சி மூலம் ஆஜராகிய நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலியில் ஆஜராகவில்லை எனக் கூறி, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய சென்னை குடும்ப நல நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த நிலையில், மனைவி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதை எதிர்த்து மனு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நிர்மல்குமார் கூறுகையில், குற்ற வழக்குகளில் தான் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராவது கட்டாயம் என கூற முடியும். பிற வழக்குகளில் குறிப்பாக, விவாகரத்து வழக்குகளில் காணொலிக் காட்சி மூலம் ஆஜராக வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், நேரில் ஆஜராக வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}