சென்னை: கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் குறைக்கும் வகையிலும் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்குச் செல்ல இ பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 7ம் தேதி முதல் இந்த நடைமுறையை அமல்படுத்தவும், இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய அளவில் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மிக முக்கிய கோடை வாசஸ்தலங்களில் முதலிடத்தில் இருப்பவை ஊட்டியும், கொடைக்கானலும்தான். இதில் ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. அதன் தலைநகராகவும் திகழ்கிறது. கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. ஊட்டிக்கு மலை ரயில், சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் உள்ளன. கொடைக்கானலுக்கு சாலை மார்க்கமாக மட்டுமே போக முடியும். கொடைக்கானலும் சரி, ஊட்டியும் சரி மலைவாசஸ்தலங்கள் என்ற நிலையிலிருந்து மாறி மக்கள் நெரிசல் மிக்க, வாகனங்கள் பெருகி விட்ட நகரங்களாக மாறி விட்டன. இதனால் அவற்றின் சுற்றுச்சூழலும் கூட சீர் கெட ஆரம்பித்து விட்டது.
கோடைகாலத்தில் இந்த இரு ஊர்களுக்கும் செல்ல மக்கள் படையெடுப்பார்கள். லட்சக்கணக்கில் திரளும் மக்கள் கூட்டத்தால் இந்த இரு ஊர்களும் திணறிப் போய் விடுகின்றன. சுற்றுச்சூழல் சீர்கேடும் பெருகி விடுகிறது. சுற்றுலாப்பயணிகள் போட்டு விட்டுச் செல்லும் பிளாஸ்டிக் குப்பைகளால் இந்த மலைப்பகுதிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது.
இந்தநிலையில் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக இன்று நீதிபதி சதீஷ் குமார் தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுகள்:
- மே 7ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை இ பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
- இ பாஸ் நடைமுறை குறித்து தேசிய அளவில் ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும்.
- சுற்றுலா பயணிகள் எத்தனை பேர் வருகிறார்கள், எத்தனை வாகனங்களில் வருகிறார்கள், எத்தனை நாட்கள் தங்குவார்கள், எங்கெல்லாம் சுற்றிப் பார்ப்பார்கள் என்ற விவரம் சேகரிக்கப்பட வேண்டும்.
- மே 7ம் தேதி முதல் இ பாஸ் வைத்திருக்கும் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
- உள்ளூர் வாகனங்களுக்கு இ பாஸ் நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
- இபாஸ் வழங்கும் நடைமுறை தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும்.
கொரோனா காலத்தில் இந்த இ பாஸ் நடைமுறை தமிழ்நாடு முழுவதும் அமலில் இருந்தது. கொரோனா ஊரடங்கு சமயத்தின்போது இ பாஸ் இல்லாமல் யாரும் எந்த ஊருக்கும் செல்ல முடியாத நிலை இருந்தது. மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த இந்த இ பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இ பாஸ் எடுக்காமல் கேளம்பாக்கத்திற்குப் போய் பெரும் சர்ச்சையில் சிக்கினார் என்பதெல்லாம் நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் கொரோனா காலத்திற்குப் பிறகு மீண்டும் இ பாஸ் நடைமுறையை கொண்டு வரவுள்ளனர். இந்த முறை, அது சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழல் சீர்க்கேட்டை சற்றுக் குறைக்கும் வகையிலும் கொண்டு வரப்படவுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}