நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் படங்கள் மட்டும இருக்க வேண்டும்.. ஹைகோர்ட் உத்தரவு

Jul 23, 2023,02:02 PM IST
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகிய இருவரின் புகைப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் (பொறுப்பு) சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதனால் சலசலப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தலைமை பதிவாளர் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றகளில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்களை தவிர மற்ற எவரது படங்களையும், கோர்ட்டுக்குள்ளும்,கோரட் வளாகத்திற்குள்ளும் வைக்கக் கூடாது.  இந்த உத்தரவை மாவட்ட முதன்மை நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், முதன்மை நீதிபதிகள், மாவட்ட நீதித்துறை நடுவர்கள், புதுச்சேரி தலைமை நீதிபதி ஆகியோர் கண்டிப்பாக கடைப்பிடிக்கவும் சுற்றறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

அம்பேத்கர் உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் புகைப்படங்களை கோர்ட்டுக்குள் வைக்க பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இருப்பினும் இதை உயர்நீதிமன்றத்தின் ஃபுல் பெஞ்ச் நிராகரித்து விட்டது. எனவே திருவள்ளுவர், மகாத்மா காந்தி படங்களைத் தவிர வேறு தலைவர்களின் படங்கள் கோர்ட் வளாகத்திற்குள் இருக்கக் கூடாது.



தலைமைப் பதிவாளரின் இந்த உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களுக்கு மட்டுமே அனுமதி என்பது சரியல்ல. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு அம்பேத்கர் படங்களும் கோர்ட்டுகளில் இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆலந்தூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவுவாயிலில்  உள்ள வழக்கறிஞர் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் படத்தை அகற்றுமாறு ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் வலியுறுத்தும்படி காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதிக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்