சென்னை: அடுக்குமாடி கட்டுமான விதிகளின் படி தரைதள உரிமை அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் உள்ளது என்பதை பெருநகர வளர்ச்சி குழுமம் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெசன்ட் நகரை சேர்ந்த அஸ்வின் வர்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெசன்ட் நகரில் "ரமணியம் ஸ்வர்ணமுகி" என்ற அடுக்குமாடி குடியிருப்பை கட்டுமான நிறுவனம் போதுமான தரைதள வசதி இல்லாமல் விதிகளை மீறி கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து சென்னைபெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு பின்னரும், கட்டுமான நிறுவனத்துக்கு ஆதாரவாக பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கட்டுமான நிறுவனம் சார்பில் எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை, பெருநகர வளர்ச்சி குழும விதிகளின் படி கட்டுமானங்கள் முடிந்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முரளி குமரன், (Non FSI) தரைதள கட்டுமான விதிப்படி, கட்டிட உரிமையாளர்களுக்கு போதுமான இடங்கள் ஒதுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், விதிகளின்படி தரைதள உரிமை அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். சட்டவிரோத கட்டுமானங்கள் இருந்தால் அவற்றை அகற்றி அனைத்து கட்டிட உரிமையாளர்களின் பொது பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்துக்கு உத்தரவிட்டனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}