அதிமுகவின் அடையாளத்தை முற்றிலும் இழந்தார் ஓ.பி.எஸ்.!

Nov 07, 2023,04:00 PM IST

சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அதன் உரிமையை இழந்த நிலையில் தற்போது அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் அதிகாரத்தையும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இழந்துள்ளார்.


ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் சிறிது காலம் பிரிந்து அரசியல் செய்தனர். பின்னர் சசிகலா வெளியேற்றத்துக்குப் பின்னர் இருவரும் இணைந்தனர். ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வர் பதவியிலும் இருந்து வந்தனர்.


ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பூசலால் இருவரும் பிரிந்தனர். பிரிந்த பிறகு அதிமுக யாருக்கு என்ற மோதலில் இருவரும் குதித்தனர். மாறி மாறி சட்டப் போராட்டங்கள் வெடித்தன. இதில் ஒவ்வொன்றாக தோற்று வந்தார் ஓபிஎஸ். இந்த நிலையில் தற்போது இன்னும் ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளார் ஓ.பி.எஸ்.




எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், அதிமுகவின் கட்சி சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி கடந்த செப்டம்பர் மாதம்  வழக்கு தொடர்ந்தார் எடப்பாடி பழனிசாமி.  அதில், அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார். ஒருங்கிணைப்பாளர் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 


இந்த வழக்கு முடியும் வரை முதலில் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.


இதன் மூலம் அதிமுகவின் அனைத்து அடையாளங்களையும் இழந்துள்ளார் ஓ.பி.எஸ்.

சமீபத்திய செய்திகள்

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்