சென்னை: அதிமுக கொடி, கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் கட்சி பெயர், சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த வழக்கு முடியும் வரை முதலில் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார்.

இதையடுத்து அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டார். இந்த வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில், மூல வழக்கின் உத்தரவின் அடிப்படையில் முடிவெடுக்குமாறு ஓ.பி.எஸ் தரப்பு நீதிபதிக்குக் கோரிக்கை வைத்தது.
ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்து மனு செய்திருந்தது. இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த மார்ச் 12ம் தேதி முடிவடைந்தது.வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்திருந்தார்.
இன்று இதில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் இடைக்கால உத்தரவை நிரந்தரமாக்குவதாகவும், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த நிரந்தர தடை விதிக்ககப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
வரும் லோக்சபா தேர்தலில் எப்படியும் இரட்டை இலை சின்னத்தைப் பெற்று விடுவோம் என்று கூறி வந்தார் ஓ.பி.எஸ். கண்டிப்பாக தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் பேசி வந்தார். ஆனால் தற்போதையை தீர்ப்பு அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}