மதுரை நக்கீரர் மற்றும் பெரியார் நுழைவாயில்.. இரண்டையும் இடித்து அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு

Sep 23, 2024,05:13 PM IST

மதுரை: மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் நக்கீரர் மற்றும் பெரியார் நுழைவாயில்களை இடித்து அப்புறப்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 


மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல்  செய்திருந்தார். அந்த மனுவில்  மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள அலங்கார நுழைவு வாயில்கள் உள்ளன. இந்த இரண்டு நுழைவு வாயில்களும் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக உள்ளன. இதனால்  இருசக்கர வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் போன்றவை முந்தி செல்ல அலங்கார வளைவுகளின் ஓரங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. 




வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே இதை அப்புறப்படுத்த வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதற்கு உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு உயர் நீதி மன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. 


இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம், சுந்தர மோகன் ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது மதுரை மாநகராட்சி தரப்பில் நுழைவு வாயில்களை அப்புறப்படுத்துவதற்கு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை நகர் பகுதியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டதன் நினைவாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்  அருகே  நக்கீரர் நுழைவு வாயில் அமைக்கப்பட்டது.




அதேபோல கேகே நகர் பகுதியில் பெரியார் நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. ஏறக்குறைய 43 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலங்கார நுழைவு வாயில்கள் கட்டப்பட்டன. தற்போது போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகமாகிறது. சாலைகள் அகலப்படுத்தப்பட்டு விட்டன. 


இதனால் இந்த இரு நுழைவு வாயில்களின் தூண்களும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவே அமைந்துள்ளது. இத்தகைய தூண்களை பலர் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துகின்றனர். போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறாக இருக்கும் நுழைவு வாயில்களை அகற்ற எந்த ஆய்வும் தேவையில்லை. ஆறு மாதங்களுக்கு உள்ளாக இரு நுழைவு வாயில்களையும் அகற்ற  மதுரை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு விரும்பினால் சாலையின் இரு ஓரங்களையும் இணைக்கும் வகையில் பெரிய அளவிலான நுழைவு வாயில்களை அமைத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்