மதுரை: மதுரை என்றாலே அரசியல் பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லாத களம். 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தின் நட்சத்திர இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சி, மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய நீதிக்கட்சி சார்பில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடுவது, அந்தத் தொகுதியை ஒரு முக்கிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக மாற்றியுள்ளது.
சுந்தர் சி-யின் மனைவி குஷ்பூ ஏற்கனவே பாஜகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நிலையில், சுந்தர் சி நேரடியாகத் தேர்தலில் குதித்துள்ளது எதிர்பாராத ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. குஷ்பு கடந்த தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். இந்தத் தேர்தலிலும் அவர் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் திடீர் வரவாக சுந்தர் சியை வேட்பாளராக்கியுள்ளது புதிய நீதி கட்சி. பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரு தொகுதிகளில் புதிய நீதிக் கட்சி போட்டியிடுகிறது. அதில் ஒரு தொகுதிதான் மதுரை மத்தி. இங்கு இரட்டை இலையில் அக்கட்சி போட்டியிடவுள்ளது. இன்னொரு தொகுதியில் தாமரை சின்னத்தில் புதிய நீதிக் கட்சி போட்டியிடும்.
ஆனால் மதுரை மத்திய தொகுதி தேர்தல் களம் சுந்தர் சி-க்கு அவ்வளவு எளிதானதாக இருக்காது. ஏனெனில், எதிரே நிற்பது திமுகவின் பலமான முகமான, மதுரையின் அடையாளங்களில் ஒருவரான, தேசிய அளவில் பிரபலமானவரான அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
2021 தேர்தலில் பி.டி.ஆர் சுமார் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மதுரையின் வளர்ச்சி மற்றும் மென்பொருள் பூங்கா போன்ற திட்டங்கள் பி.டி.ஆர்-க்குச் சாதகமாகச் சொல்லப்படுகின்றன. மேலும் நிதியமைச்சராக இவர் பணியாற்றியபோது தேசிய அளவில் இவர் பெயர் பெற்றார். இவரது புத்திசாலித்தனம், நிதி மேலாண்மையில் இவரது ஞானம், வாதிடுவதில் உள்ள புலமை என பல விஷயங்கள் இவருக்குச் சாதகமாக உள்ளன.
சுந்தர் சி இதுவரை அரசியலில் இருந்தவர் கிடையாது. சமூக பணிகளிலும் கூட இவர் ஈடுபட்டது கிடையாது. திரைப் பிரபலம் மட்டுமே இவருக்குப் பின்னணியில் உள்ளது. அரண்மனை போன்ற வணிக ரீதியான படங்களின் மூலம் மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் நற்பெயர் வாக்குகளாக மாற வாய்ப்புண்டு.
கூடுதலாக இரட்டை இலை என்ற பெரிய பலமும் சேர்ந்துள்ளது. மறுபக்கம், மனைவி குஷ்பூவின் தீவிரப் பிரச்சாரம் பெண் வாக்காளர்களை ஈர்க்க ஒரு முக்கியக் காரணியாக இருக்கும். இவரது பூர்வீகம் ஈரோடுதான். ஆனாலும், மதுரை மீதான தனது ஈடுபாட்டை அவர் தனது பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார், இது உள்ளூர் மக்களிடம் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். இவரது படங்கள் பலவற்றை மதுரை பின்னணியிலும் எடுத்துள்ளார் சுந்தர்.சி.
நிர்வாகத் திறமை மற்றும் திரை செல்வாக்கு ஆகியவற்றுக்கு இடையிலான போட்டியாக இது மாறியுள்ளது பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்க்கலாம், எது வெல்லப் போகிறது என்பதை.
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!
Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?
Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு
{{comments.comment}}