மதுரை: மதுரை சித்திரைப் பெருவிழா அரசுப் பொருட்காட்சி வரும் 4ம் தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் சங்கீதா தெரிவித்துள்ளார்.
பொதுவாக மதுரையில் திருவிழாவிற்கும் கொண்டாட்டத்திற்கும் பஞ்சம் இருக்காது. அதே சமயத்தில் விழாக்களுக்கு பெயர் போன மதுரை மாநகரில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அரசு பொருட்காட்சியும் நடைபெற்று வருகிறது. திருவிழாவிற்காக வரும் மக்கள் பொருட்காட்சிக்கும் சென்று தங்கள் நேரத்தை கழித்து வருகின்றனர். குறிப்பாக எதிர் சேவை, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குதல், உள்ளிட்ட வைபோகங்களுக்காக வரும் உள்ளூர், வெளியூர் மக்கள் பொழுதுபோக்கிற்காக மதுரை சித்திரை
பொருட்காட்சியையும் கண்டு ரசித்து வருகின்றனர். இது மதுரை மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு அங்கமாகவும் திகழ்கிறது.
இந்த சித்திரை பொருட்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும். இதில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் செயல்படுத்த போகும் திட்டங்கள் குறித்து மக்களிடம் சென்று சேர்க்கும் விதமாக ஊரகத்துறை, வேளாண்மை, மருத்துவம், கால்நடை, கல்வி, மாவட்ட மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட தமிழக அரசின் 27 துறைகளின் அரங்குகள், பொழுதுபோக்குகள் நிறைந்த விளையாட்டு அம்சங்கள், விற்பனை அங்காடிகள், உணவகங்கள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து மே 17ஆம் தேதி வரை திருவிழாக்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, சித்திரை அரசு பொருட்காட்சி வரும் மே நான்காம் தேதி தொடங்கி, மொத்தம் 45 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் சங்கீதா தெரிவித்துள்ளார்.
இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த அரசு பொருட்காட்சி தினமும் மாலை 03.45 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.
பொருட்காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15, சிறுவர்களுக்கு ரூ.10 நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 27 துறைகளின் அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள், விற்பனை அங்காடிகள், உணவகங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
{{comments.comment}}