மதுரை: தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருவதால், உச்சிப் பகல் நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்என மதுரை மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த இரண்டு தினங்களாக தென் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளுமை நிலவி வந்தது. தற்போது வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் அனல் காற்று அதிகம் வீசி வருகிறது. இதனை சமாளிக்க முடியாமல் மக்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று தமிழகத்தில் எட்டு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெயில் கொளுத்தியது. இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மக்கள் பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். வெயில் அதிகமாக உள்ள பகுதிகளில் அனல் காற்று அதிகம் வீசி வருகிறது. இதனால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வப்போது போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். நீர் சத்துக்கள் நிறைந்த பழச்சாறுகளை அருந்த வேண்டும். மேலும் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்க கூடாது.
வெயில் காலங்களில் ஏற்படும் அவசர தேவைகளுக்கு 1077 மற்றும்1070 ஆகிய இலவச எண்களை தொடர்பு கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}