மதுரை: காவல்துறையின் உதவி இல்லாமல் கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பில்லை; நடவடிக்கை கடுமையாக இருந்தால் கஞ்சா புழக்கமும், வழக்குகளும் எப்படி அதிகரிக்கிறது? என்று உயர்நீதி மன்றம் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, யானைமலை பகுதியில் கடந்த ஏப்., 22ம் தேதி, 7 பேர் போதையில் ரகளை செய்து வந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கான்முகமது மீது போதையில் இருந்த ஆசாமிகள் தாக்குதல் நடத்தினர். இதில் கான்முகமது படுகாயமடைந்தார். இந்த வீடியோ இணைய பக்கங்களில் பரவி வைரலாகியது.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும், இந்த சம்பவத்தில் காவல் துறையினர் உதவியுடன் தான் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், திருமுருகன் தொடர்ந்த இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் தனபால் ஆகியோர் அடங்கிய குழு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஒத்தக்கடை பகுதியில் ரகளை ஈடுபட்ட நபர்கள் மது அருந்தி இருந்தனர். அவர்கள் கஞ்சாவை பயன்படுத்தவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த 2,486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறையின் உதவி இல்லாமல் கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும்போது கஞ்சா புழக்கமும்,வழக்குகளும் எப்படி அதிகரிக்கும் என கேள்வி எழுப்பினர்.எத்தனை வழக்குகளில் நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தொடர் கேள்விகளை எழுப்பினர். மேலும், இது குறித்து தமிழக உள்துறைச் செயலர் தமிழக காவல்துறை டிஜிபி போதை பொருள் கட்டுப்பாடு பிரிவு இயக்குனர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}