மதுரை: தமிழ்நாட்டிலே இருக்கிற மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் சார்ந்த அலுவலர்கள் பணியில் நியமிக்கப்படும்போது, மக்கள் அதிகமாக பயன்பெறுவார்கள். இதற்கு மத்திய தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகமான அளவில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ:
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அன்பான வணக்கம். ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவது மிகக் குறைவாக இருக்கிறது. இதை பலமுறை நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். அது சார்ந்த பல பிரச்சனைகளையும் கையில் எடுத்திருக்கின்றோம். கடந்த காலங்களில் குறிப்பாக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தேர்வு மையங்களை தமிழ்நாட்டில் அமைக்க மறுப்பது. தமிழ்நாட்டில் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களின் தேர்வு மையம் நியமிப்பது. இந்தி முறையை திணிப்பது என பல காரணங்களை கடந்த காலங்களை எழுப்பி அதற்கு தீர்வு கண்டிருக்கிறோம்.

முன்பு மண்டல வாரியாக பணி நியமனம் இருந்தது. அதனால் தமிழ்நாட்டில் அதிக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றார்கள். அது மட்டுமல்ல தமிழ் நாட்டில் இருக்கின்ற ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் தெரிந்த அலுவலர்கள் இருந்தார்கள். உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை காரணம் காட்டி ஒரே தேசம், ஒரே தேர்வு என்ற அடிப்படையில் மண்டல வாரியாக முழுமையும் நிறுத்திவிட்டு, இப்பொழுது மையப்படுத்தப்பட்ட தேர்வுகளை மட்டுமே நடக்கிறது. அதனுடைய விளைவுகளை தமிழ்நாடு முழுவதும் பார்க்க முடிகிறது. தபால் அலுவலகத்திற்கு சென்றாலும், ரயில்வே அலுவலகத்திற்கு சென்றாலும், வங்கிக்கு சென்றாலும் பெரும்பாலும் தமிழ் தெரியாத அலுவலர்கள் இன்றைக்கு ஒன்றிய அரசு நிறுவனங்களில் நிரம்பி வழிகின்றனர்.
இந்த பின்னணிகளை எதிர்த்து மண்டல வாரியாக தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டு வருகிறோம். இந்த பின்னணியில் மத்திய தேர்வாணையம் இரண்டு தேர்வுகளை அறிவித்திருக்கிறது. ஒன்று Combined Graduate level தேர்வு. ஜூலை 24ம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி. வருமானவரி, கலால், கணக்காயர் போன்ற துறைகளில் பணி நியமனங்கள் பெற முடியும். இன்னொன்று Multi Tasking staff. இதற்கு +2 கல்வித் தகுதி போதுமானது. எதிர்வரும் ஜூலை 31ம் தேதி விண்ணப்பத்திற்கான கடைசி நாள். இந்த 2 தேர்வுகளுக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
ஒரு பக்கம் மண்டல அளவிலான தேர்வுகள் என்று நாம் கோரிக்கை வைத்தாலும், இன்னொரு பக்கம் அகில இந்திய அளவிலான தேர்வுகளில் நாம் பங்கேற்காமல் இருக்க முடியாது. இருக்க கூடாது. தமிழ்நாடு அரசு தேர்வுகளில் குறிப்பாக விஏஓ தேர்வுகளில் 24 லட்சத்திற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வருவதை நாம் செய்தி தாள்களில் வருவதை பார்க்கிறோம். அதற்கு நிகரான இந்த தேர்வுகளுக்கு சில லட்சங்களில் தான் விண்ணப்பங்கள் வருகின்றன. சிலர் ஆதங்கப்படுகிறார்கள், கவலைப்படுகிறார்கள். அந்த கவலை போக்கப்பட வேண்டும். இந்த இரண்டு தேர்வுகளுக்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள் மிக அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த தேர்வுகளை தேர்ச்சி பெறுவது, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிலே இருக்கிற மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் சார்ந்த அலுவலர்கள் பணியில் நியமிக்கப்படும்போது சேவை துறை சார்ந்த ஒன்றில் மக்கள் அதிகமாக பயன்பெறுவார். எனவே இந்த இரண்டு தேர்வுகளிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகமான அளவில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!
கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!
{{comments.comment}}