மதுரை: மதுரையில் எம்.பி. சு. வெங்கடேசன் அலுவலகம் அருகே தாயுடன் இருந்த நாய்க்குட்டிகளை பிரித்துக் கொண்டு போய் விட்டார்கள் போல.. அந்த நாய்க்குட்டிகளை தூக்கிக் கொண்டு வந்து தாயிடம் சேர்த்து மகிழ்ந்துள்ளார் சு. வெங்கடேசன்.
மதுரை எம்.பி.யாக இருப்பவர் சு. வெங்கடேசன். மதுரை தொகுதி மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் எந்தப் பிரச்சினை வந்தாலும் உரிய முறையில் உரிய இடத்தில் குரல் கொடுத்து, முட்டி மோதி நிவாரணம் பெறுவதில் இந்த தேதிக்கு இவர்தான் நம்பர் ஒன் எம்.பி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் பெயரைக் கேட்டாலே, ரயில்வே, வங்கிகள் என பலரும் அலறும் நிலையை ஏற்படுத்தி வைத்திருப்பவர்.

சமீபத்தில் கூட ஒரு ரயில்வே அதிகாரிக்காக, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் நிற்கும் பிளாட்பாரத்தையே மாற்றிய செயலை கடுமையாக கண்டித்ததோடு அதற்காக ரயில்வேயிடமிருந்து விளக்கத்தையும் வர வைத்தவர் சு. வெங்கடேசன்.
இந்த நிலையில் ஒரு பாசமான காரியத்தையும் தற்போது செய்து அதை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவரது அலுவலகம் அருகே ஒரு நாய் குட்டிகள் போட்டிருந்தது போல. அந்தக் குட்டிகளை யாரோ தூக்கிச் சென்று விட்டனர். அந்த தாயையும் விரட்டி விட்டுள்ளனர். குட்டிகளைப் பிரிந்த அந்த தாய் பகலெல்லாம் பரிதவித்துக் கிடந்துள்ளது.
இரவில் இதுகுறித்துத் தெரிய வந்த சு. வெங்கடேசன் அந்த குட்டிகளை கண்டறிந்து அவற்றைக் கொண்டு போய் தாயிடம் சேர்த்துள்ளார். குட்டிகள் இரண்டையும் பார்த்து பாசத்தோடு ஓடி வந்த அந்த தாய், அவற்றை கண்டு மகிழ்ந்து அமைதி அடைந்தது. இரண்டு குட்டிகளையும் தடவிக் கொடுத்து மகிழ்ந்தது. குட்டிகளும் தாயைக் கண்ட நிம்மதியில் அதனிடம் பாசத்துடன் குழைந்தன.
மக்கள் பிரச்சினைகளையும் சு வெதான் தீர்த்து வைக்க வேண்டியுள்ளது. நாய்களுக்கு பிரச்சினை வந்தாலும் அங்கும் வெங்கடேசன்தான் வர வேண்டியுள்ளது.. கோபத்தில் மட்டுமல்ல.. பாசத்திலும் மதுரைக்காரங்க நம்பர் ஒன் அப்படின்னு நிரூபிச்சிட்டார் சு.வெங்கடேசன்!
நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!
கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!
{{comments.comment}}