மதுரை: 2026ல் தளபதியின் வருகையால் கொடியும் கோட்டையும் நொடியில் மாறும் என்று மதுரை விஜய் ரசிகர்கள் கலக்கல் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடத்தி வருகிறார். இக்கட்சி 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதற்கான ஆயத்த பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 2024ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்க தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டில் மாணவிகள் அதிக நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவானது. இதனை தவிர்க்க இந்த ஆண்டு பரிசு வழங்கும் விழாவை இரண்டு கட்டங்களாக நடத்த தமிழக வெற்றி கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

முதல் கட்ட பரிசு வழங்கும் விழா வரும் ஜூன் 28ஆம் தேதி 21 மாவட்ட மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதனை அடுத்து இரண்டாம் கட்டமாக ஜூன் மூன்றாம் தேதி 19 மாவட்ட மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக வெற்றிக்கழக வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22ம் தேதி வர இருக்கிறது.இது விஜய்யின் 50வது பிறந்த நாள் ஆகும். இந்த நாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் விஜய் ரசிகர்கள் பலவிதமான போஸ்டர்களை அடித்து ஒட்டி, தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஓட்டியுள்ளனர். அதில், 2026ல் தளபதியின் வருகையால் கொடியும், கோட்டையும் நொடியில் மாறும் என்ற வாசகம் அடங்கிய போஸ்டரில் தந்தை சந்திரசேகருடன் இணைந்து நடந்து வருவது போன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் மதுரை மாவட்ட தளபதி ரசிகர்கள் சார்பாக ஒட்டப்பட்டுள்ளது.
மதுரை.. ஜில் ஜில் ஜிகர்தண்டாவுக்கும், கொத்துப் பரோட்டாவுக்கும், கமகமக்கும் சால்னாவுக்கும் மட்டும் பெயர் போனதல்ல.. போஸ்டர்களுக்கும் ரொம்ப பேமஸ்.. காது குத்து முதல் கல்யாணம் வரை நம்மாளுங்க ஒரு விசேஷத்தையும் சும்மா விட மாட்டாங்க.. வித்தியாசமான வாசகங்களுடன் விதம் விதமாக போஸ்டர்கள் போடுவதில் மாஸ்டர் டிகிரி வாங்கியவர்கள் நம்ம மதுரைக்காரர்கள்.. விஜய் பிறந்தநாளை இப்பவே இப்படி ஆரம்பிச்சிருக்காங்க.. இனி நாள் நெருங்க நெருங்க இன்னும் உக்கிரமாகும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கு.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}