சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எதுவும் நடக்கவில்லை. சுய மரியாதையை விட்டுக் கொடுக்காதவன் நான். விட்டுக் கொடுக்கவும் இல்லை என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.
ஆண்டாள் திருக்கோவிலுக்குச் சென்ற இளையராஜா அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால் அர்த்த மண்டபத்தைத் தாண்டி அவர் செல்ல முயன்றபோது அவரை ஜீயர்களும் மற்றவர்களும் அனுமதிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இதனால் அர்த்த மண்டபத்தின் நுழைவாயில் படி அருகே நின்று தனக்கு அளிக்கப்பட்ட கெளரவத்தை அவர் ஏற்றுக் கொண்டார்.
இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஒரு விளக்கம் கொடுத்திருந்தது. அதில் அர்த்த மண்டபத்திற்குள் இதர நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று விளக்கப்பட்டிருந்தது.
தற்போது இளையராஜாவே இதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}