பிரயாக்ராஜ் : உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகாகும்பமேளாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளதால் நாடே பரபரப்பாகி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மகாகும்பமேளா ஜனவரி 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. பிப்ரவரி 26ம் தேதி வரை மகாகும்பமேளா நடந்து வருகிறது. உலகின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளான பக்தர்கள், சாதுக்கள், துறவிகள், அகோரிகள் என பலரும் கும்பமேளாவில் குவிந்து வருகிறார்கள்.
பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பதால் மகாகும்ப மேளாவில் புனித நீராட ஆர்வம் காட்டி வருகின்றனர். திரிவேணி சங்கமத்தில் அமாவாசை, பஞ்சமி போன்ற நாட்களில் புனித நீராடினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இதனால் தை அமாவாசையான இன்று மிக அதிக அளவிலான மக்கள் அதிகாலையிலேயே புனித நீராட, பிரயாக்ராஜில் குவிந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தை அமாவாசையான இன்று மட்டும் அமிர்த ஸ்நானம் எனப்படும் புனித நீராட கிட்டத்தட்ட 10 கோடி பேர் பிரயாக்ராஜில் கூடி உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரயாக்ராஜில் நிலவும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமித்ஷாவும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் போனில் கேட்டு வருகின்றனர்.
மகாகும்பமேளாவில் இதற்கு முன்பும் இது போல் பல முறை கூட்ட நெரிசல் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 1954 ல் நடந்த கும்பமேளாவின் போது புனித நீராட ஏராளமானோர் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 300 பேர் வரை உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒற்றைக் கொம்போனே.. ஓர்கணிக்கு அம்மையப்பனை சுற்றி வந்து பெற்றவனே!
எலிகள் செய்யும் பூஜை.. விநாயகரின் செம டான்ஸ்.. ஏஐயில் கலக்கும் பிள்ளையார் வீடியோக்கள்!
காதலிப்பதாக இருந்தால்.. இதயம் முரளி மாதிரி இருக்காதீங்க.. சீனத்து லியூ போல போட்டு உடைச்சிருங்க!
பிள்ளையாரை வழிபட சிறந்த நைவேத்தியங்கள் என்னென்ன.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்
அன்புள்ள அம்மா.. அருமையான அப்பா!
ஜம்மு காஷ்மீரை உலுக்கி எடுத்த கன மழை.. வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்ற 5 பக்தர்கள் பலி
தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு
திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?
{{comments.comment}}