மும்பை : மகாராஷ்டிராவில் அம்மாநில துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால், 3 எம்எல்ஏ.,க்களுடன், 3வது மாடியில் இருந்து குதித்து அனைவரையும் பீதி அடைய வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் துணை சபாநாயகர் மற்றும் 3 எம்எல்ஏ.,க்கள் தங்களின் ஜாதியையும், பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இவர்களின் கோரிக்கையை அரசு பெரிதாக கண்டு கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் துணை சபாநாயகர் மற்றும் 3 எம்எல்ஏ.,க்கள் இன்று தலைமை செயலகத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனால் தலைமை செயலகமே பரபரப்பானது.
தற்கொலை முயற்சியின் ஈடுபட்டவர்களில் பாஜக எம்.பி.,யும் ஒருவர். அது மட்டுமல்ல துணை சபாநாயகர் நர்ஹரி, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர்களை ஒரு வழியாக கடுமையாக போராடி வலை வைத்து, பாதுகாப்பு படையினர் காப்பாற்றி, பத்திரமாக தரையிறக்கி உள்ளனர். இந்த மூன்று எம்எல்ஏ.,க்கள் வலையில் தட்டுத்தடுமாறி வந்து, தரையிறங்கிய வீடியோ சோஷியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர அமைச்சரவை கூட்டம் மந்திராலயத்தில் உள்ள தலைமை செயலக கட்டிடத்தில் இன்று நடந்துள்ளது. இதில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்த போது தான் சில எம்எல்ஏ.,க்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இதில் 3 பேர் மட்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல மாநிலங்களில் தட்கட் இனத்தவர்களை பழங்குடியினர் பிரிவில் தான் சேர்த்து வைத்துள்ளனர். அது போல் மகாராஷ்டிராவில் சேர்ப்பதற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த போராட்டம், தற்கொலை முயற்சியை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
"போராட்டம் நடத்துனீங்க சரி...இது வழக்கமா எல்லா அரசியல்வாதிங்களும் பண்ணுறது தான். எதுக்குய்யா 3வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொள்ள குதித்தீர்கள்? தற்கொலை செய்து கொள்ளும் விஷயமா இது?" என சோஷியல் மீடியாவில் பலரும் இவர்களுக்கு பல விதங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}