மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து குடியா சௌஹான் என்ற பெண், தனது கணவரை கொன்று வீட்டின் உள்ளேயே புதைத்துள்ளார். குடியாவின் கணவரான விஜய் சௌஹான் மனைவியின் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கொலையை மறைக்க, அந்த பெண் புதைத்த இடத்தில் டைல்ஸ் ஒட்ட வைத்துள்ளார். இந்த கொடூரமான சம்பவத்தை செய்த பிறகு, குடியாவும், அவருடைய கள்ளக்காதலன் மோனு விஸ்வகர்மாவும் தலைமறைவாகிவிட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
இந்த கொலை நலாசோபரா கிழக்கு கங்காடிப்படா பகுதியில் உள்ள சாய் வெல்ஃபேர் சொசைட்டி சாவல் பகுதியில் நடந்துள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த கொலை நடந்துள்ளது. குடியாவும், மோனுவும் விஜய்யின் உடலை வீட்டிற்குள்ளேயே ஒரு மறைவான இடத்தில் புதைத்தனர். யாரும் கண்டுபிடிக்காதபடி, அந்த இடத்தின் மேல் டைல்ஸ் ஒட்டப்பட்டது.
இதில் என்ன கொடுமை என்றால் தனது மைத்துனரை வைத்து அதாவது விஜய்யின் தம்பியிடம் சொல்லித்தான் டைல்ஸ் ஒட்டியுள்ளார். அந்த இடத்தில் தான் தனது சகோதரர் புதைக்கப்பட்டுள்ளார் என்று தெரியாமல் டைல்ஸை ஒட்டியுள்ளார் அவரது தம்பி. இந்த சம்பவம் நடக்கும்போது, தம்பதியரின் எட்டு வயது மகன் அதே வீட்டில் இருந்துள்ளான்.
விஜய் காணாமல் போனது தொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்தபோதுதான், போலீஸ் விசாரணையில் இது தெரிய வந்தது. குடியாவுக்கும், மோனுவுக்கும் இடையே நடந்த சமூக வலைதள, வாட்ஸ் ஆப் உரையாடல்களை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த உரையாடல்களை வைத்து விசாரித்ததில், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ஆனால், போலீசார் அவர்களை கைது செய்வதற்குள் தப்பி ஓடிவிட்டனர்.
பெல்ஹார் போலீசார் குடியாவையும், மோனுவையும் தேடி வருகின்றனர். விஜய்யின் உடலை தோண்டி எடுத்து, தடயவியல் பரிசோதனை செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஜெகதீப் தன்கர் விரைவில் குணமடைய வேண்டும்.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு
தக்காளி விலை மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு கிலோ ரூ.60.. அப்படீன்னா சட்னிக்கு ஆப்பா!
அதிமுக கூட்டணிக்கு வாங்க.. சீமான், விஜய்யை மீண்டும் அழைத்த எடப்பாடி பழனிச்சாமி.. போவாங்களா!
ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா ஏன்.. என்னவோ நடந்திருக்கிறது.. சந்தேகம் கிளப்பும் காங்கிரஸ்
டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ.. பத்திரமாக தரையிறங்கியது.. பயணிகளுக்கு ஆபத்தில்லை
ரவி சாஸ்திரியின்.. சிறந்த இந்திய வீரர்கள் லிஸ்ட்டில்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
வெண்ணெய் .. அது ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்குன்னு தெரியுமா?.. தெரிஞ்சுக்கங்க பாஸு!
{{comments.comment}}