டெல்லி: திரினமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள், இன்று நடந்த நாடாளுமன்ற எத்திக்ஸ் கமிட்டிக் கூட்டத்திலிருந்து ஆவேசமாக வெளிநடப்பு செய்தனர். அசிங்கமான முறையில் கேள்விகள் கேட்டதாக மஹுவா மொய்த்ரா கோபமாக கூறினார்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா மீது நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கியதாக புகார் வந்துள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த புகார் குறித்து விசாரிக்க நேரில் ஆஜராகுமாறு நாடாளுமன்ற உரிமைக் குழு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மொய்த்ராவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதில் கலந்து கொண்டனர். ஆனால்கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மொய்த்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூண்டோடு வெளிநடப்புச் செய்தனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறுகையில், தனிப்பட்ட முறையிலும், முறையற்ற வகையிலும் மொய்த்ராவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று கூறினர். மொய்த்ரா கூறுகையில், என்ன வகையான மீட்டிங் இது.. அசிங்கமான கேள்விகளாக கேட்கிறார்கள் என்று கடும் கோபத்துடனும், ஆவேசத்துடனும் கூறினார்.
மொய்த்ராவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்பிக்கள் உத்தம் குமார் ரெட்டி, டேனிஷ் அலி உள்ளிட்டோர் பேசினர்.
தர்ஷன் ஹிரநந்தானி என்ற தொழிலதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான லாகின் விவரத்தைக் கொடுத்ததாக மொய்த்ரா மீது புகார் உள்ளது. அந்தப் புகாரை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}