கொல்கத்தா: திரினமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மஹுவா மொய்த்ராவும், பிஜூ ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ராவும் ஜெர்மனியில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மிகவும் ரகசியமாக இந்தத் திருமணம் நடந்தேறியுள்ளது.
திரினாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. அதிரடியாக பேசக் கூடியவர். நாடாளுமன்றத்தை தனது அனல் கக்கும் பேச்சால் அதிர வைப்பவர். பினாகி மிஸ்ரா பிஜூ ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்தவர். இருவரும் ஜெர்மனியில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர். மே 30ம் தேதி இந்தத் திருமணம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் ஜோடியாக காட்சி அளிக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இந்தத் திருமணம் குறித்து பலருக்கும் தெரியவில்லை. புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்துதான் இந்தத் திருமணம் குறித்தே தெரிய வந்துள்ளது. மஹுவா மொய்த்ராவுக்கு 50 வயதாகிறது.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான பினாகி மிஸ்ரா, 1996 இல் பூரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முதன்முதலில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் படித்த இவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.
1996 க்குப் பிறகு 10 வருட காலம் மிஸ்ரா அதே தொகுதியிலிருந்து மீண்டும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் பிஜு ஜனதா தளம் (BJD) சார்பில் 2009 முதல் 2019 வரை மூன்று முறை எம்.பி.யாகப் பணியாற்றினார். மிஸ்ராவுக்கு தனது முந்தைய திருமணத்தின் மூலம் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
மிகவும் வெளிப்படையாகப் பேசக்கூடிய எம்.பி.க்களில் ஒருவரான மஹூவா மொய்த்ரா, முன்னர் டேனிஷ் நிதியாளர் லார்ஸ் ப்ரோர்சனை மணந்தார், பின்னர் அவரை விவாகரத்து செய்தார். வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராயுடன் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் உறவில் இருந்தார், பின்னர் அவரிடமிருந்தும் பிரிந்தார். அவரை "கைவிடப்பட்ட முன்னாள் காதலன்" என்று விவரித்தார்.
முதல் முறை எம்.பியாக இருந்தபோது, கௌதம் அதானியின் வணிகப் போட்டியாளர்களில் ஒருவரால் தூண்டப்பட்டு அவருக்கு எதிராகக் கேள்விகள் எழுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார் மஹூவா. ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று 2வது முறையாக எம்.பி. ஆனார் என்பது நினைவிருக்கலாம்.
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}