கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் திரினாமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையில் இன்று தனது கட்சி சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் அதிரடியாக அறிவித்தார் மேற்கு வங்க முதல்வரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி.
கொல்கத்தாவில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் 42 வேட்பாளர்களையும் மேடையில் ஏற்றி அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார் மமதா பானர்ஜி.
முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹ்ராம்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி போட்டியிடுகிறார். கிரிக்கெட் இரட்டையர்களான பதான் சகோதரர்களில் மூத்தவர் யூசுப். இளையர் இர்பான் பதான் என்பது நினைவிருக்கலாம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இரு சகோதரர்களும் ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
கடந்த நாடாளுமன்றத்தில் அதிரடி எம்.பியாக வலம் வந்தவர் மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாகவும், நாடாளுமன்ற இமெயில் வசதியை தவறாகப் பயன்படுத்தியதாகவும் கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு மீண்டும் சீட் கொடுத்துள்ளார் மமதா பானர்ஜி. மஹுவா மொய்த்ரா, கிருஷ்ணாநகர் தொகுதியிலிருந்து மீண்டும் போட்டியிடவுள்ளார்.
மமதாவின் தம்பி மகன் அபிஷேக் பானர்ஜிக்கும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் டயமன்ட் ஹார்பர் தொகுதியல் போட்டியிடவுள்ளார். அசன்சோல் தொகுதியில் நடிகர் சத்ருகன் சின்ஹா போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார் மமதா பானர்ஜி.
இளம் தலைவரான தேபங்ஷு பட்டசார்யாவுக்கு தம்லுக் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பிரபலத்தைத் தேடிக் கொடுத்த கேலோ ஹோபே பிரச்சாரத்தை வடிவமைத்தவர் இவர்தான்.
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
{{comments.comment}}