நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

Jan 23, 2026,09:06 PM IST

சென்னை:  மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.


தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், புதிய கட்சியான தவெகவிற்கு விசில் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளுக்கு ஏற்கனவே நிலையான சின்னங்கள் உள்ளன. தேர்தல் தேதி பிப்ரவரியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




இந்நிலையில், கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் நமது தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தலைமையில் வருகிற ஜனவரி 24-ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. 


சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்