- சிவ.ஆ.மலர்விழி ராஜா
அகல்யா.
அழகும் அறிவும் நற்பண்புகளும் நிறைந்த ஒரு தன்னலமற்ற பெண்.
தாய் தந்தையின் பாசத்தில் உறவுகளுடன் பந்த பாசங்களில் பிணைக்கப்பட்ட ஒரு மென்மையான மனம் படைத்த தேவதை எனலாம். இருபது வயது நிறைந்த அழகிய பதுமை.
சட்டென பார்த்தால் மாருதியின் கை வண்ணத்தில் கண்மணி யின் அட்டை பட நாயகி கண்முன் தெரிவது போல் அத்தனை அழகு அவள்.
அகல்யா ! அகல்யா...!
அம்மாவின் குரல் கேட்டு இதோ வந்துட்டேன் மா என்றவள் அம்மாவின் அருகே வந்து நின்றாள். இன்று வெளியில் வேலை அது இதுவென்று எங்கும் சென்று விடாதே மா ...!
அம்மாவின் முகத்தைப் பார்த்தால் அகல்யா ஏன்மா என்ன ஆயிற்று
ஒன்றுமில்லை அம்மா இன்னைக்கு உன்ன பொண்ணு பாக்க வராங்க
என்னமா நீங்க அதுக்குள்ள கல்யாணம் அது இதுன்னு பேசிட்டு இருக்கீங்க
பின்ன காலத்தில ஒரு கல்யாணம் பண்ண வேண்டாமா
இல்லமா நான் படிக்கணும் வேலைக்கு போகணும்
நிறைய சம்பாதிக்கணும் இதெல்லாம் ஒரு கனவுமா எனக்கு இருக்கட்டுமா
கல்யாணத்தை பண்ணிக்கிட்டு அப்புறமா வேலைக்கு போ. சம்பாதி யார் வேணான்னு சொன்னா
இல்லைமா கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா அவங்க வீட்ல உங்கள மாதிரி பார்த்துப்பாங்களா? வேலைக்கு எல்லாம் அனுப்புவாங்களா.. சரிதாம்மா வர மாப்பிள்ளை கிட்ட பேசிட்டம்னா சரி ஆயிடும் சரி மா அப்புறம் உங்க இஷ்டம்
அவளுடைய சம்மதத்துக்காக காத்துகிட்டு இருந்தவங்க போல கல்யாணம் ஏற்பாடு செய்தாங்க. திருமணம் நல்லாவே முடிஞ்சது .
அவளும் பல கனவுகளோடு புகுந்த வீட்டுக்கு வந்தா. ஆனா மாமனார் மாமியார் அவள் நினைச்சது மாதிரி இல்ல . கணவன் அதற்கு மேல தினம் தினம் குடிச்சிட்டு வந்தான் . அவள ஒரு பொண்ணு மாதிரியே நினைக்கவில்லை. அவளது அன்பையும்
அவன் நேசிக்கவில்லை.
ரொம்பவும் வருத்தப்பட்டாள் அகல்யா. வேதனை பட்டாள் தன்னோட வாழ்க்கை இப்படி ஆயிடுச்சுன்னு கலங்கினாள். அகல்யாவோட அம்மா அப்பா ஒரு நாள் வீட்டுக்கு வந்தாங்க.
அகல்யா நல்லா இருக்கியா மா அம்மா கேட்டாள்.
நான் நல்லா இருக்கேன் மா நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க என்றபடி முகத்தை திருப்பிக் கொண்டாள் அகல்யா. கண்ணில் வந்த கண்ணீரை துடைச்சுக்கிட்டாஅகல்யா
நம்ம வீட்டுக்கு ரெண்டு நாளைக்கு வந்து தங்கிட்டு போகலாம் மா என்றால் அம்மா .
காத்திருந்தது போல சரிமா என்றாள்
அப்போது அங்கு வந்த அகல்யாவோட மாமியார் என்ன பொண்ணு கிட்ட பர்சனலா பேசிட்டு இருக்கீங்களா . என்ன பேசுறீங்க ? அப்படின்னு கேட்டாள் மாமியார்.
இல்ல அகல்யாவை ஒரு இரண்டு தினங்களுக்கு எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போலாம்னு நினைக்கிறேன் என்றாள் அம்மா .
அதுக்குள்ள என்ன இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே . ... ! அப்புறம் அழைத்துக்கொண்டு போலாமே என்றாள் மாமியார் .
அவள் மிகவும் கலங்கி போய் நின்னா. எப்படியாவது வீட்டுக்கு அழைச்சிட்டு போக மாட்டாங்களா என ஏங்கினாள்
சரி ரெண்டு நாளைக்கு அழச்சிட்டு போயிட்டு உடனே கொண்டு வந்து விட்டுடுங்க. மாமியார் கொஞ்சம் அதட்டலான தொணியில தான் சொன்னாள். அவளும் சட்டென புறப்பட்டாள்.
ஊருக்கு வந்து ரெண்டு நாள் ஆகிவிட்டது . அவள் மிகவும் சோர்வாக காணப்பட்டாள். இரண்டு நாள் ஆகிவிட்டது மிகவும் கவலையாக காணப்பட்டாள் அகல்யா.
அம்மா நான் ஊருக்கு போகணுமா. ? என்றாள்அகல்யா ..,..
என்னமா இப்படி கேக்குற கல்யாணம் ஆயிடுச்சுனா புருஷன் வீட்டில் வாழ்கிறது தானே முறை. இப்படி கேட்டா என்ன
அர்த்தம் என்றாள் அம்மா..
அம்மா அவர் ரொம்பவே குடிக்கிறார் மாமியார் மாமனார் எல்லாம் என்கிட்ட அன்பாவே நடந்துக்க மாட்டேங்குறாங்க என்று மிகவும் வருத்தமாக சொன்னாள் அகல்யா.
அம்மா கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்கோ.. எல்லாம் சரியாயிடும் காலம் எல்லாத்தையும் மாத்திடும் . அதனால கொஞ்சம் பொறுமையா இரும்மா என்றாள் அம்மா .
அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கனத்த மனதுடன் சரிமா என்றாள்.
மீண்டும் மாமியார் வீடு
கணவன் மனைவிக்குள் பிரச்சினை வந்ததே தவிர வேறு மாற்றமில்லை. அவளும் முடிந்தவரை போராடினாள். பெற்றோர்களுக்கு பாரமாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள் அகல்யா. தனது அன்பால் கணவனின் கெட்ட குணங்களை மாற்றி விடலாம்
என்ற நம்பிக்கையோடு காத்திருந்தாள்.
நம்பிக்கை வீண் போகவில்லை.
அவளது வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக வசந்தம் வீசத் தொடங்கியது. அவளது பொறுமைக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ற நல்ல கணவனாக அவன் மாறத்தொடங்கினான் அவளது வாழ்க்கை இப்போது மணம் வீசும் மல்லிகையாக நறுமணம் வீசியது.
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
ஜனவரி + தேர்தல் வரப் போகுது.. பொங்கல் பரிசு என்ன கிடைக்கும்.?.. எதிர்பார்ப்பில் மக்கள்!
ஓசூர் விமான நிலையம்.. TIDCOவின் புதிய டெண்டர்.. தமிழக - கர்நாடக எல்லையில் ஒரு கேம் சேஞ்சர்!
இம்ரான் கான் உயிரோடு இருப்பதற்கு என்ன ஆதாரம்?.. கேட்கிறார் மகன் காசிம் கான்
ஆடி அசைந்து வரும் டித்வா புயல்.. சென்னையில் எப்போது மழை தொடங்கும்.. யாருக்கு ரெட்?
மூச்சு உள்ள வரை... அன்றும், இன்றும் என்றும் அதிமுக தான்...ஜெயக்குமார் உறுதி!
எண்ணமே ஏற்றம் தரும்.. கலையின் கவிதை சிதறல்கள்!
மலர்களிலே அவள் மல்லிகை (சிறுகதை)
கருணாநிதிக்கு நெருக்கமானவர்.. கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற சிவக்குமாருக்கு.. முதல்வர் புகழாரம்
அரசுப் பள்ளிகளில் 'காக்கா முட்டை' கட்டாயம்.. அரசு உத்தரவு.. மாணவர்கள் ஹேப்பி!
{{comments.comment}}