புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி பல்விருகமாகிப், பறவையாய்ப் பாம்பாகி!

Sep 29, 2026,03:48 PM IST

- சிவ.ப. மாலதி ராஜாராம்


விநாயகர் துதி


உன்னை நினைந்து உருகும் அடியாரை,, எந்நாளும் காப்பாய்!கணேசா! உன்னை மறவாமல் துதிக்கும் நெஞ்சினில் உறைந்திடும் ஓங்கார ரூபா!


சிவபுராணம் தொடர்ச்சி


(26_31) புல்லாகி, பூடாய்,  புழுவாய், மரமாகி பல்விருகமாகிப், பறவையாய்ப், பாம்பாகிக், கல்லாய், மனிதராய்ப், பேயாய்க், கணங்களாய், வல் அசுரராகி, முனிவராய்த், தேவராய், செல்லா நின்ற இத்தாவர_ சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்!


வரிகள் கோர்வையாக வருவதால் விளக்கத்தையும் கோர்வையாகப் பார்க்கலாம் 




புல்லாகி, பலவிதமான அடர்ந்த செடியாகவும் (புதர்), புழுவாகவும், பலவகைப்பட்ட மரமாகவும்,(விருகம்)_ பலவகைப்பட்ட விலங்குகளாக,பறவைகளாக,, பாம்பாக, கற்பாறையாகிஅணுக்களில் அடங்கி கிடக்கும் ஆன்மாவிற்கு அவரவர். வினைக்கு ஏற்ப உயிர் கொடுத்து மனிதர்களாகவும் பேயாகவும், பூதகணங்களாக, வன்மை மிக்க அசுரர்களாக, முனிவராக  வானுலக தேவராகவும், நிலையாக உள்ளனவாகவும் இயங்கும் தன்மை உடையனவாகவும் பல கோடி உயிரினங்களுள் எல்லா வகையான பிறப்பும் எடுத்து யான் தளர்ச்சி அடைந்தேன்,, எம்பெருமானே,


"மனிதப் பிறவி என்பது கடலை கையால் நீந்தி மறுக்கரையை அடைவது போல் கடினமானது ஆகும்" இவ்வாறு 14 வகை படிகளைக் கடந்து இவ்வுலகில் பிறப்பெடுத்துள்ளோம்"


உயிர்களின் பிறப்புஎன்பது நான்குவகைப்படும்


(1) முட்டையில் ஊர்வன பரப்பன 

(2) வியர்வையில் கிருமிகள், பேன்

(3) வித்துக்கள் (விதையில்)  மரம், செடி,கொடி போன்ற தாவர வகைகள் 

(4) கருப்பையில் விலங்குகள் மனிதர்கள் தேவர்கள்.


32. மெய்யே, உன் பொன்னடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன் - உண்மையின் பொருளே உனது பொன்னான அடிகள். கண்டு இன்று நான் முத்தி என்னும் வீடு பேறு அடைந்தேன் (இந்த வரியானது மாணிக்கவாசகர் தனது 32 வது வயதில் ஜோதியில் கலந்ததை குறிப்பிடுகிறது)


இறைவனுடன் ஜோதியில் இரணடறக்கலந்தவர்கள்


(மாணிக்கவாசகர், ஆண்டாள் நாச்சியார், அருள்மிகு வள்ளளார் மூவரும் ஆவர்)


33. உய்ய,என் உள்ளத்துள், ஓங்காரமாய் நின்ற __  அடியேன் உய்யும் பொருட்டு என் உள்ளத்துள் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் வடிவமாய் நின்றவனே


34.  மெய்யா,!விமலா,! விடைபாகா" வேதங்கள் __ மெய்யவனே, குற்றம் இல்லாதவனே, அறத்தின் வடிவாம்

 காளையை ஊர்தியாக  உடையவனே ,,


35. "ஜயா', என ஓங்கி, ஆழ்ந்து,அகன்ற, நுண்ணியனே!-- வேதங்கள் துதிக்க அவற்றை எட்டாது உயர்ந்தும், ஆழ்ந்தும், பரந்தும் விரிந்தும் நுட்பமாய் இருக்கும் பெருமானே!


திருச்சிற்றம்பலம்


(தொடரும்)


(மாலதி ராஜாராம்,  உழவாரப்பணி மற்றும் தேவாரம் திருவாசகம் முற்றோதுதல் செய்தல் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் பொழுதுபோக்கு ஆகும். இல்லத்தரசி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மழை போற்றுதும் மாமழை போற்றுதும்!

news

புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி பல்விருகமாகிப், பறவையாய்ப் பாம்பாகி!

news

பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.. இதுக்கு நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?

news

Tuesday Special: செட்டிநாடு ரெசிப்பி.. பிஞ்சு சுண்டைக்காயில் பிரியமான பச்சடி.. செம்ம டேஸ்ட்டி!

news

ஜெம் வீரமணி வழக்கு: முதல்வர் விஜய்யை விசாரிக்கக் கோரி டி.ஆர்.பாலு கோர்ட்டில் மனு

news

Short Story: மீளுதல்!

news

பன்முகம் கொண்ட மேஜர் சுந்தர்ராஜன்.. Let us know about this Gentleman!

news

சோழப் பேரரசின் மாபெரும் குலவிளக்கு: பேரரசி செம்பியன் மாதேவி

news

அழகு தமிழ் ராகத்திலே ஆனந்தமாய் மெட்டு எடு அன்பாக மாமன் நெஞ்சம் அடியே நீ தொட்டுவிடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்