கலந்த அன்பு ஆகி கசிந்து உள் உருகும்!

Oct 03, 2026,01:56 PM IST

- சிவ.ப.மாலதி ராஜாராம்


ஐந்து கரத்தனை, யானை முகத்தனை, இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை, நந்தி மகன்தனை, ஞான கொழுந்தினை, புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.


திருச்சிற்றம்பலம்


சிவபுராணம் தொடர்ச்சி....


{பாடல் வரி}


56. விலங்கு மனத்தால் விமலா உனக்கு க்__


{பொருள்}


விலங்கு மனம் _ குரங்கு மனம்,, எந்த ஒன்றையும் பற்றி நிலைத்து நில்லாமல் தாவிக் கொண்டே இருக்கும் மனதை குரங்கு மனம் என்பர், இவ்வாறு மனம் உள்ள என்னை,,மாசு அற்றவனே, அன்பு என்னும் உணர்வை வைத்து இந்த ஆன்மாவை முன்னேற்ற செய்.


{பாடல் வரி}


57. கலந்த அன்பு ஆகி கசிந்து உள் உருகும் _


58. நலம்_தான் இலாத சிறியேற்கு நல்கி 


{பொருள்}


கசிந்து உள்ளம் உருகும் அளவுக்கு இடமான மனத்தை தந்த அவனுடைய திருவருளை எனக்கு அளித்தும் நான் அதை பெறுவதற்கு  என்ன தகுதி உடையவன்,,அணுவிலும் அண்டத்திலும் நிறைந்து பிரபஞ்சம் முழுவதும் உள்ள இறைவனை நான் கண்டுகொள்ளவில்லையே!"


{பாடல்வரி}




59. நிலம்_தன் மேல் வந்து அருளி,, நீள் கழல்கள் காட்டி,_


{பொருள் }


நிலம் தன் மேல் _ இம்மண்ணுலகில் வந்து உன்னுடைய நீண்ட திருப்பாதங்களை எனக்கு காட்டி, {இதனையே இறைவன் சுந்தரருக்கு சித்தவிட மடத்தில் அவர் இடம் மாறி, மாறி படுத்தாலும்,, விடாமல் அவரது திருமுடி மீது தன் திருவடிகள்படுமாறு வைத்துள்ளார்.


மேலும் இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய்ப் பில்கி, நனந்தனைய திருவடி  என் தலைமேல் வைத்தார் என்று திருநாவுக்கரசர் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார் }எனவே இறைவன் பால் நீங்காஅன்பு கொண்டுள்ள அடியார்க்கு இறைவனே இறங்கி வருவான் வந்து அருள் புரிவான் என்பதை நாம் அறிவோம்,


{பாடல் வரி}


60. நாயின் கடையாய் கிடந்த அடியேற்கு,


{பொருள்}


தான் கக்கியதை தானே உண்ணும் குனம்கொண்டது நாய், அதுபோல மனிதனானவன் உலகியல் பொருள்கள் மீது ஆசை கொண்டு மீண்டும் மீண்டும் துன்பத்தை அனுபவிக்கின்றான்,, இவ்வாறு நாயை விட கேவலம் {ஆணவம் கன்மம்,மாயை  பொருந்திய உன் அடியவனுக்கு,, இவ்வாறும் பொருள் எடுத்துக் கொள்ளலாம் மற்றொரு பொருள்,, நாயானது தன் தலைவன் மீது தீராத அன்பு கொண்டு நன்றி உணர்வோடும் இருக்கும் ஆனால் நான் அதனை விட கீழானவன், என்றும் இருபொருள் படும்,பாடியுள்ளார்


{பாடல்வரி}


61. தாயின் சிறந்த தயவான தத்துவனே __


{பொருள்}


தாயின் அன்பை விட மிக சிறந்தவனே மிக சிறப்பான கருணை உள்ளம் கொண்டவனே,,


{பாடல் வரி}


62.  மாசற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே!__


{பொருள்}


கலங்கம் இல்லாத குற்றமற்றவனே ஒளிவிடும் மலர் போன்ற சுடரானவனே,,


{பாடல் வரி}


63. தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!


{பொருள்} அறிவொளியான ஆசானே! தேனே!

 கிடைத்தற்குஅரிய அமுதே! 


{பாடல்வரி}


64. பாசமாம் பற்ற றுத்துப்,,பாரிக்கும் ஆரியனே!! 


{பொருள்}


மும்மலத்தின் தொடர்பை அறுத்து என்னை காப்பாற்ற நின்றவனே 


{பாடல் வரி}


65. நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட_


{பொருள்}


என் மனதின் வஞ்சம் ஒழிய  எனக்கு அருள் புரிந்த பெருமானே!


திருச்சிற்றம்பலம்


தென்னாடுடைய சிவனே போற்றி!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!


தொடரும்


(மாலதி ராஜாராம், உழவாரப்பணி மற்றும் தேவாரம் திருவாசகம் முற்றோதுதல் செய்தல் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் பொழுதுபோக்கு ஆகும். இல்லத்தரசி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

குட்டி காந்தி தாத்தா!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

கலந்த அன்பு ஆகி கசிந்து உள் உருகும்!

news

Malliga Selvaraj Poem: கோலங்கள்!

news

கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?

news

கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?

news

Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?

news

தாராபுரத்தில் நாளை முதல்வர் விஜய் ரோட்ஷோ: த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரச்சாரம்

அதிகம் பார்க்கும் செய்திகள்