33 வயது நடிகை தற்கொலை.. கேரளாவில் பரபரப்பு!

Sep 01, 2023,01:42 PM IST
திருவனந்தபுரம்:  மலையாள நடிகை அபர்ணா நாயர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை மூலம் தனது உயிரை முடித்துக் கொண்டதாக  போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மலையாள டிவி நடிகை அபர்ணா நாயர். சினிமாவிலும் நடித்துள்ளார். பல்வேறு சீரியல்களிலும் நடித்து வந்தார். 33 வயதான அவர் திருவனந்தபுரத்தில் தனது கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்தார்.



இந்த நிலையில் இன்று காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இயற்கைக்கு முரணான மரணம் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அபர்ணா நாயர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சந்தனமழா, ஆத்மசக்தி, மைதிலி வீண்டும் வரும் உள்ளிட்ட பல்வேறு டிவி சீரியல்களில் அபர்ணா நாயர் நடித்துள்ளார். மலையாள டிவி உலகில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர். நைவேத்யம் என்ற படத்தின் மூலம் சினிமாவிலும் நடித்துள்ளார். மல்லுசிங், தட்டத்தின் மறயத்து, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்