சிங்கப்பூர்: மலேசியாவைச் சேர்ந்த 45 வயது தமிழர் ஓட்டிய பஸ் விபத்துக்குள்ளாகி, 74 வயது பெண்ணின் கால் நசுங்கியது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு 3 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த தமிழரின் பெயர் குணசீலன் சுப்ரமணியம். இவர் சிங்கப்பூரில் பஸ் டிரைவராக இருக்கிறார். சம்பவத்தன்று பஸ்ஸை ஒரு நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு பஸ்ஸை எடுத்துள்ளார். அப்போது 74 வயதான துமினா சபி என்ற பெண் கீழே இறங்கிக் கொண்டிருந்தார். பஸ் வேகமாக எடுக்கப்பட்டதால் தடுமாறிய அவர் கீழே விழுந்தார். அதில் அவரது கால் பலத்த சேதமடைந்தது.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு இரு கால்களிலும் முழங்காலுக்குக் மேலே பலமாக சேதமடைந்திருந்ததால் அறுவைச் சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்ட்ட சுப்ரமணியத்தின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவர் உரிமம் பெறவும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 ஆண்டுகளுக்கு அவர் சிங்கப்பூரில் எந்த வாகனத்தையும் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அவருக்கு 3 வார சிறைத் தண்டையும் வழங்கப்பட்டுள்ளது. பணியின்போது அலட்சியமாக இருந்ததாகவும், செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
{{comments.comment}}