மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நோ பார்க்கிங் பகுதியில் செல்லக்கூடாது என காரை தடுத்து நிறுத்திய செக்யூரிட்டி மீது இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் சரமாரியாக தாக்கிய வழக்கில், தனிப்படை போலீசார் 3 பேரை தற்போது கைது செய்துள்ளனர்.
மாமல்லபுரம் அருகே ஐந்து ரதம் பகுதியில் கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சொகுசு காரில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் வளாகத்திற்குள் வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த செக்யூரிட்டி, இது நோ பார்க்கிங், இந்தப் பகுதிகளில் வாகனங்கள் செல்லக்கூடாது என காரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆனால் மீறி தாங்கள் சென்னைக்கு செல்வதாக கூறி அந்த சொகுசுக்கார் நோ பார்க்கிங் பகுதிக்குள் நிற்காமல் செல்ல முயன்றது.. இதனைத் தொடர்ந்து அந்த செக்யூரிட்டி காரை தடுத்து நிறுத்தி கார் உள்ளே போகக்கூடாது என கடுமையான வார்த்தைகளால் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த இரண்டு பெண்கள் காரில் இருந்து உடனடியாக இறங்கி செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கினார்கள். இதில் பெண் ஒருவர் செக்யூரிட்டி வைத்திருந்த கம்பை பிடுங்கி, செக்யூரிட்டியை கடுமையாக தாக்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அடிப்பதை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
செக்யூரிட்டியை தாக்கிய பெண்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து மாமல்லபுரம் போலீசார் செக்யூரிட்டி தாக்கிய பெண்கள் உட்பட நான்கு பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இந்த வீடியோவில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
போலீஸ் விசாரணையில் காரில் வந்தவர்கள் சென்னை அருகே உள்ள முடிச்சூரைச் சேர்ந்தவர்கள், ஒரே குடும்பத்தினர் என்று தெரிய வந்தது. இதையடுத்து பிரபு இன்பதாஸ் (41), சண்முகப்பிரியா (38), கீர்த்தனா ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}