Australia Vs Sri Lanka: "முதுகுப்பிடிப்புடன் ஆடினேன்.. சிறப்பாக பவுல் செய்தது மகிழ்ச்சி".. ஆடம் ஜம்ப

Oct 17, 2023,11:37 AM IST

லக்னோ: ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான உலகக் கோப்பைப் போட்டியில், ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, தான் முதுகுப் பிடிப்புடன் விளையாடியதாக கூறியுள்ளார்.


ஆஸ்திரேலியா - இலங்கை இடையே நேற்று லக்னோவில் உலகக் கோப்பைப் போட்டி நடைபெற்றது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்திருந்ததால் இந்தப் போட்டியில் வெல்வது அந்த அணிக்கு முக்கியமானதாக இருந்தது. இதனால் அதன் பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் ஒரு வெறி இருந்தது.




முதலில் பவுலிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா கை கொடுத்தார். சிறப்பாக பந்து வீசிய  அவர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அவரது அபாரமான பந்து வீச்சு காரணமாக இலங்கை அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.


8 ஓவர்கள் வீசிய அவர் 1 மெய்டன் ஓவர் போட்டு, 47 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் காரணமாக, ஆஸ்திரேலியாவின் சாம்பியன் கனவு மீண்டும் உயிர் பெற்றுள்ளது.


இந்த நிலையில் ஆடம் ஜம்பா, முதுகுப்பிடிப்புடன் நேற்றைய போட்டியில் விளையாடியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் போட்டிக்குப் பின்னர் பேசுகையில், 2 நாட்களாக எனக்கு முதுகுப் பிடிப்பு இருந்து வருகிறது. இருப்பினும் அது எனது ஆட்டத் திறமைக்கு பாதிப்பைத் தரவில்லை. என்னால் அணிக்கு வெற்றி தேடித் தர முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.


இலங்கைக்கு எதிரான போட்டியின்போது பந்து வீசியபோது முதுகுப் பிடிப்பு அதிகம் சிரமம் தரவில்லை. இதனால்தான் என்னால் நன்றாகப் பந்து வீச முடிந்தது என்றார் ஜம்பா.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்