டெல்லி: தனது பாஸ் தன்னிடம் ஆபாசமாக பேசியதால் கடுப்பான ஊழியர், அடுத்த நொடியே ராஜினாமா கடிதத்தை அனுப்பி அதை ரெடிட் தளத்திலும் பகிர்ந்தார். அந்த ஊழியருக்கு ஆதரவாக தற்போது பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கோபம் வருவதும், கோபத்தில் வார்த்தைகள் தடிப்பதும் பலருக்கும் பல நேரங்களில் நடப்பதுதான். கடும் கோபத்திலும் கூட நிதானமாக இருப்பவர்கள் மிக மிக அரிது. கோபம் வரும்போது பலர் தேவையில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அந்த சம்பவம் அறுவெறுப்பானதாக மாறி விடுகிறது. மனக் காயங்களையும் ஏற்படுத்தி விடுகிறது.
வார்த்தைகளைக் கொட்டி விட்டு பிறகு அதற்காக வருந்துவோர் பலர் உண்டு. சே.. அந்த மாதிரி பேசியிருக்கக் கூடாது.. கொஞ்சம் நாக்கை அடக்கியிருக்கலாம்.. அவசரப்பட்டுட்டோமே என்று பலரும் பீல் பண்ணுவார்கள். சிலருக்கோ தாங்கள் பேசியது குறித்து வெட்கமோ, கூச்சமோ இருக்காது. சரியாதான் பேசினோம் என்று பிடிவாதமாக இருப்பார்கள்.

இந்த நிலையில் ஜான் என்பவர் தனக்கு நேர்ந்த சம்பவத்தை ரெடிட் தளத்தில் பகிர்ந்து பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள ரெடிட் பதிவில் இப்படிக் கூறியிருக்கிறார்.
"நான் ஒர்க் பிரம் ஹோம் செய்கிறேன். ஒரு கம்ப்யூட்டர் அக்ஸஸ் தொடர்பாக எனது பாஸைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். அது அவரைக் கோபப்படுத்தி விட்டது. இதையெல்லாம் ப்ரீயாக இருக்கும் போது செய்திருக்கக் கூடாதா.. வேலை நேரத்தில்தான் செய்யணுமா என்று கோபமாக கேட்டார். அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை "f.. off " என்று அவர் சொன்னதும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.
உடனே நான், இதை இலவசமாக செய்யவில்லை. எனது வேலையை ராஜினாமா செய்கிறேன்.. இந்த நொடியே.. மறுபடியும் போய் யாரிடமும் f..off என்று சொல்லாதீர்கள் என்று கூறி விட்டேன் என்று கூறி தான் அனுப்பிய ராஜினாமா மெயிலையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அவர் அனுப்பிய மெயிலுக்கு இதுவரை பதில் வரவில்லையாம். இந்த பதிவுக்கு பலரும் வந்து கமெண்ட் கொடுத்துக் கொண்டுள்ளனர். அதில் ஒருவர், நீங்க இப்படி பதில் அனுப்பியிருக்கக் கூடாது ஜான்.. உங்களோ பீட்பேக்குக்கு நன்றி அந்தோணி.. உங்களோட அட்வைஸை பின்பற்ற முடிவு செய்திருக்கேன்.. f* பண்ணப் போறேன்.. அதையும் உடனே பண்ணப் போறேன் என்று கூறியிருக்க வேண்டும் என்று ரசாபாசமாக கமெண்ட் செய்துள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}