மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்... அடுத்து என்ன நடக்கும்?

Jul 26, 2023,06:36 PM IST
டெல்லி : மணிப்பூர் வன்முறை, கலவரம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதை ஏற்றுள்ளார் சபாநாயகர். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கண்டிப்பாக லோக்சபாவில் தோல்வியையே சந்திக்கும். காரணம், பாஜகவுக்கு தனித்த பெரும்பான்மை பலம் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் சேர்த்தால் இமாலாய பலத்துடன்தான் பாஜக அரசு உள்ளது. இதெல்லாம் எதிர்க்கட்சிகளுக்குத் தெரியாதது இல்லை. ஆனாலும் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அவர்கள் கொண்டு வந்ததே.. பிரதமர் நரேந்திர மோடியை பேச வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.




பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. கூட்டத் தொடர் துவங்கியது முதலே மணிப்பூர் கலவரத்தை முக்கிய பிரச்சனையாக எழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக தொடர்ந்து அடுத்தடுத்து இரு அவைகளும் ஒத்தி��ைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பார்லிமென்ட் இரு அவைகளும் முடங்கி உள்ளன. இந்நிலையில் இன்று காங்கிரசின் கவுரவ் கோகாய் உள்ளிட்ட 50 உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

இ-ந்-தி-யா கூட்டணியை சேர்ந்த சோனியா காந்தி, ஃபரூக் அப்துல்லா, டி.ஆர்.பாலு, சுப்ரியா சுலே உள்ளிட்டோரும் லோக்சபா சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அளித்துள்ளனர். இது தவிர 9 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட பாரத் ராஷ்டிரிய சமேதி கட்சியும் தனியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.  இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு விரைவில் நடத்தப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இருப்பினும் எந்த தேதியில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்படும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை.

543 உறுப்பினர்களைக் கொண்ட லோக்சபாவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 331 எம்.பி.,க்கள் பலம் உள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியான இ-ந்-தி-யா.,விற்கு 144 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் நம்பிக்கை ஓட்டெடுப்பில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. ஒருவேளை அவர்கள் தோற்கும் பட்சத்தில், மணிப்பூர் விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி, பார்லிமென்ட் கூட்டத் தொடருக்கு இடையூறு ஏற்படுத்தலாம்.

அதோடு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும். மத்திய உள்துறை அமித்ஷா மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதத்தில் பங்கேற்று, பதிக்க அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கேட்டு வருவதால், நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு பிறகு பிரதமர் மோடி இரு அவைகளிலும் உரையாற்ற வாய்ப்புள்ளது. இதைத்தான் எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்துள்ளனர். பிரதமர் வாயால் மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேச வைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது ஒரே இலக்காக உள்ளது.

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என மத்திய அரசும் தெரிவித்துள்ளது. இதனால் ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்தாலும் மத்திய அரசை ஒரு கை பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்