சென்னை: டி. இமானின் இசையில் பிரபல பாடகர் மனோ முதல் முறையாக லெவன் படத்தில் இணைந்து பாடி உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இசையமைப்பாளர் டி இமானும், பிரபல பாடகர் மனோவும் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக பயணித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை பணியாற்றியதில்லை. இந்த நிலையில் லெவன் படத்தில் முதல் முறையாக இமான் இசையில் மனோ பாடியுள்ளார். இப்படத்தை ஏ.ஆர் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர்.
இந்த தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே சில நேரங்களில் சில மனிதர்கள், செம்பி ஆகிய பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தயாரித்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு, மற்றும் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் லெவன் படத்தை இயக்கியுள்ளார்.
இதில் பிரபல தெலுங்கு நடிகரான நவீன் சந்திரா நாயகனாகவும், ரியா ஹரி நாயகியாகவும் நடித்துள்ளார். இவர்களுடன் விருமாண்டி புகழ் அபிராமி, ஆடுகளம் நரேன், வத்திக்குச்சி புகழ் திலீபன், மெட்ராஸ் புகழ் ரித்திகா, அர்ஜை உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர்.
தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் லெவன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புலனாய்வு திரில்லர் படமாக உருவாகியுள்ள லெவன் திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
லெவன் படத்தின் பாடல் குறித்து மனோ கூறுகையில், இமான் இசையை தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக பாடுவது மிக்க மகிழ்ச்சி. உயிரோட்டமிக்க இந்த பாடல் பெரிதும் வரவேற்கப்படும் என்று நம்புகிறேன் என கூறினார்.
இசையமைப்பாளர் டி இமான் கூறுகையில், மனோ அவர்களுடன் இணைந்து பணியாற்றவில்லை என்ற ஏக்கம் பல காலமாக இருந்தது, இன்று அது பூர்த்தியாகி உள்ளது. அவரது குரலுக்கு மிகவும் உகந்த பாடலை உணர்ச்சிப்பூர்வமாக அவர் பாடியுள்ளார் என கூறினார்.
இப்படம் குறித்த இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் கூறுகையில், ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக 'லெவன்' அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}