அதெப்படி அதிமுக கிட்ட பேசலாம்..  ராவோடு ராவாக  மன்சூர் அலிகான் தலைவர் பதவி காலி!!

Mar 16, 2024,05:51 PM IST

சென்னை:  இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இரவோடு இரவாக நடிகர் மன்சூர் அலிகான் நீக்கப்பட்டுள்ளார்.  அதிமுகவுடன் தன்னிச்சையாக அவர் பேச்சு நடத்தியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் தன்னை பதவி நீக்கம் செய்தவர்களைப் பெருசா எடுத்துக்காதீங்க.. இதுக்குத்தான் தமிழனை யாரும் கூட வேலைக்கு வச்சுக்க மாட்டேங்குறாங்க என்று மன்சூர் அலிகான் புலம்பியுள்ளார்.


நடிகர் மன்சூர் அலிகான் அரசியலில் பெரிய சக்தியாக இல்லாவிட்டாலும் கூட எப்போதும் ஒரு மாதிரி பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருப்பவர். தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் கட்சி தொடங்கி 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார். அந்த கட்சியின் பெயரை சமீபத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என மாற்றி தேசிய அரசியலில் குதித்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 





தேர்தல் வர உள்ள நிலையில் அவர் கட்சி பணிகளில் பிசியாக இருந்து வந்தார். ஆரணியில் போட்டியிட போவதாக கூறி அறிக்கை விட்டார். அதனைத் தொடர்ந்து போட்டி இல்லை என்று அறிவித்தார். பின்னர் திடீர் என அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக  தெரிவித்தார்.


இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், நேற்று இரவில் அவர் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஜனநாயக புலிகள் கட்சியினர் அறிவித்துள்ளனர். சென்னை வளசரவாக்கத்தில் நேற்று இரவு இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படடுள்ளது. தலைவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படடுள்ளதாக தெரிவித்துள்ளனர். 


இது தொடர்பாக ஜனநாயக புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் பேசுகையில்,  வளசரவாக்கத்தில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மன்சூர் அலிகான் தேர்தல் நெருங்கும் போதெல்லாம் புதிது புதிதாக கட்சி ஆரம்பிக்கிறார். பிறகு காணாமல் போகிறார். ஆனால், நாங்கள் தேர்தலை கடந்தும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். 


அவர் தானாகவே முடிவுகளை எடுக்கிறார். யாரோ சொல்லும் தகவலை எல்லாம் வைத்து முடிவு எடுக்கிறார். நிர்வாகிகளுடன் எந்த ஒரு முடிவு குறித்தும் ஆலோசிப்பதில்லை. வாய்க்கு வந்ததை  ஊடகங்களில் பேசி விட்டு செல்கிறார். இந்தக் காலத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். அப்பொழுது தான் வரும் காலத்தில் கட்சியால் தொடர்ந்து செயல்பட முடியும். இதன் காரணமாகவே அவரை கட்சியிலிருந்து நீக்க ஒரு மனதாக முடிவு செய்தோம். இப்போதைக்கு பொதுச்செயலாளருக்கு அனைத்து அதிகாரமும் மாற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.


மன்சூர் அலிகான் விளக்கம்


இந்தப் பஞ்சாயத்து குறித்து மன்சூர் அலிகான் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற இயக்கத்திற்கு பொதுச் செயலாளர் ஆக குன்றத்துரைச் சேர்ந்த பாலமுருகன் அவர்கள் தான் உள்ளார். சகோதரர் கண்ணதாசன் என்ற நபர் மூத்த சங்க உறுப்பினர் செல்லபாண்டியன் அவர்களால் ஆபீஸ் பாயாக வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர். சபீர்  அஹமத் பொருளாளர். இவரிடம் கேட்டுக் கொள்ளலாம். 


மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்தவர்களை படம்பிடித்து கட்சியில் சேர்த்ததாக காட்டியும், அவ்வப்போது உடன் வருகிறேன் அண்ணா என்று வந்தும் பயன் பெற்றார். தமிழ்நாடு தமிழருக்கே என்று சட்டை அணிந்து வந்ததை கண்டித்தேன். மேலும் இலங்கைக்கு யாரையோ அனுப்பி வேண்டும் என்று ஒரு லட்சம் ரூபாய் கேட்டார். 


சமீபத்தில் அலுவலக ரப்பர் ஸ்டாம்ப், புதிய 70 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளார். அவர் சேர்த்த உறுப்பினர்களை விடுவித்து புதிய உறுப்பினர்களைக் கொண்டு, மீள் மனு செய்து, தேர்தல் ஆணையத்திடம், ஒப்புதல்  வாங்கி விட்டோம். அவர் குறித்து யாரும் கவலை தெரிவிக்க வேண்டாம். 


தமிழனை வேலைக்கு இதனால் தான் யாரும் வைப்பதில்லை போலும். நான் ஆரணி, பெரம்பலூர் பகுதியில், ஆதரவு திரட்டி வருவதால்...மிகுந்த வேலையாக உள்ளேன். உறுப்பினர்கள் யாரும். அவர் மீது கோபம் கொள்ள வேண்டாம். நன்றி என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்