சென்னை: லியோ படம் தொடர்பாக நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை பேச்சு வழக்கில், நடிகை திரிஷாவிடம் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இருந்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தனர். அதற்கு பதில் அளித்துள்ள திரிஷா, மன்னிப்பு கேட்டு விட்டதால் மன்சூர் அலிகான் மீது மேல் நடவடிக்கை வேண்டாம் என்று கோரியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியனார் மன்சூர் அலிகான். இவரது பேச்சு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பும் கண்டனங்களும் வழுத்து வந்தது. திரிஷாவும் டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அத்துடன் இனி எந்த படத்திலும் மன்சூர் அலிகானுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு பரிந்துரை செய்தனர். இதன் பின்னர் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆஜராகி மன்சூர் அலிகான் விளக்கம் அளித்து வந்தார். அதனைத் தொடர்ந்து திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் மன்சூர் அலிகான்.

அந்த அறிக்கையில் 'எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு. இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வளம் வரும் போது நான் ஆசீர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக' எனக் குறிப்பிட்டு இருந்தார். இதனை அறிந்த திரிஷாவும் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டதாவது, ' தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பது தெய்வ பண்பு' என பதிவிட்டு இருந்தார்.
அப்பாடா இந்த பிரச்சனை முடிந்தது என்று இருந்த நிலையில், மீண்டும் பிரச்சனையை தொடரும் விதமாக அந்த அறிக்கையில், மன்னித்துவிடு என்று நான் கூறவில்லை என மன்சூர் அலிகான் கூறினார். அறிக்கையை ஃபோனில் சொன்னதால் இந்த தவறு நடந்துவிட்டது என்று மன்சூர் அலிகான் கூற, இது மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் பிரச்சனை வளர்த்துக் கொண்டே போக, இந்த வழக்கில் திரிஷாவிடம் விசாரணை நடத்திய பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இது தொடர்பாக, திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை பேச்சிற்கு விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர். நடிகை திரிஷா எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் போலீசார் கூறியிருந்தனர். அதன்பேரில் திரிஷா பதில் அளித்துள்ளார். அதில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு விட்டார். எனவே மேல் நடவடிக்கை தேவையில்லை என்று கூறியுள்ளாராம்.
இதன் அடிப்படையில் மன்சூர் அலிகான் மீதான வழக்கை காவல்துறை கைவிடும் என்று தெரிகிறது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}