சென்னை: அதிமுகவுடன் கூட்டணியும் கிடையாது, கூட்டுப் பொறியலும் கிடையாது.. அவர்களுக்கு குர்பானி கொடுக்கப் போறேன் என்று இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரான மன்சூர் அலிகான் அதிரடியாக கூறியுள்ளார்.
இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கலும் செய்யவுள்ளார்.
18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும் அவர்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாகவும் கூறி அனைவரையும் அதிர வைத்தார். அதிமுகவுடன் பேசவும் செய்தார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த மன்சூர் அலிகான் நேரடியாக தேர்தல் களத்தில் குதித்து விட்டார். வேலூரில் முகாமிட்ட அவர் அங்கு தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறினார், பிரச்சாரத்திலும் இறங்கினார்.
இந்த நிலையில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார் மன்சூர் அலிகான்.
கூட்டணியும் இல்லை, கூட்டுப் பொறியலும் இல்லை. தேர்தலில் தனியாக நிற்க போகிறேன். ஆனால் அதிமுக கூட்டணிக்கு குர்பானி கொடுக்கப் போகிறேன் என மன்சூர் அலிகான் அதிரடியாக பேசியுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}