சிறந்த மக்களாட்சி மலர கூடியதாக.. 2026 தேர்தல் அமையட்டும்.. பிரேமலதா விஜயகாந்த் உறுதி!

Mar 18, 2025,04:56 PM IST

சென்னை: தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று வருங்காலத்தில் தமிழக எதிர்காலம் மிகச் சிறந்ததாக, மக்களாட்சி மலரக்கூடிய ஒரு சிறந்த வருடமாக 2026 அமைய வேண்டும் என்று இந்த பிறந்தநாள் செய்தியாக உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.


தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின்  பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்ற பிரேமலதா  விஜயகாந்த், மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தாய் பிரேமலதவுக்கு இனிப்புகள் ஊட்டி மகன் விஜய பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடினார். தொடர்ந்து கேப்டன் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.அதேபோல் தேமுதிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில்  அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, 




எனது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த எங்களுடைய தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அனைத்து ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி சகோதரிகள், தமிழக மக்கள் என எல்லோரும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். கேப்டன் இல்லாத இந்த பிறந்தநாள் என்னை பொருத்தவரைக்கும் இதை நான் விழாவாகவே எடுத்துக் கொள்ளவில்லை. நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். எனக்கு இது போன்ற விழாக்கள் எல்லாம் கொண்டாட வேண்டாம் என்று.


கேப்டன் இல்லாமல் இனி எனக்கென்று  எந்த விழாவும் வேண்டாம் என்று எவ்ளோ தடவை கூறி இருக்கிறேன். ஆனால் கழக நிர்வாகிகள் எங்களுக்காக இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக்கூறி இந்த விழாவை அவர்கள்தான் நடத்திக் கொண்டு வருகிறார்கள். அதற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த அனைவருக்கும் தமிழக மக்களுக்கும் எனது பணிவான வணக்கங்களை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிற கடமைப்பட்டு இருக்கிறேன். அது மட்டும் கிடையாது இன்று கேப்டன் சொல்லிக் கொடுத்த வழியில் தான் நாங்கள் பயணிக்கின்றோம். எப்பவுமே கேப்டன் கூறுவார் ஒரு சின்ன விழாவாக இருந்தாலும் நம்மால் முடிந்ததை மக்களுக்கு உதவியாக செய்ய வேண்டும்.


அந்த வகையில் அன்னதானம், நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முழுக்க வழங்க ஏற்பாடு செய்திருக்கிறோம். இன்றைக்கு தண்ணீர் பந்தல் திறந்து வெப்பத்தினுடைய கோடை காலத்தில் மக்களை காக்க வேண்டியது நமது ஒவ்வொருவருடைய கடமை. அதனால் இன்று தமிழ்நாடு முழுக்க நலத்திட்ட உதவிகளும், அன்னதானங்களும், கோவில் பூஜைகளும், எல்லா இடத்திலும் நீர்மோர் பந்தல் திறந்து மக்களுடைய தாகத்தினை தீக்கின்ற வேலையில் இன்று தேமுதிக நிர்வாகிகள் இருக்கிறோம். எங்களால் முடிந்ததை மக்களுக்கு எப்போதும் செய்வோம் என்பது தான் என்னுடைய பிறந்தநாள் செய்தி.


அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். வருங்காலத்தில் தமிழகம் எதிர்காலம் மிகச் சிறந்ததாக, மக்களாட்சி மலரக்கூடிய ஒரு சிறந்த வருடமாக 2026 அமைய வேண்டும் என்று இந்த பிறந்தநாள் செய்தியாக உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி என கூறினார்.  முன்னதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த வாழ்த்துக் செய்தியில் கூறியுள்ளதாவது:



எடப்பாடி பழனிச்சாமி:




அன்பு சகோதரி, மரியாதைக்குரிய தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.


மக்களின் நலனுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என்றும் சிறக்கவும் , நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, மற்றும் மக்களின் நலனுக்காக உங்கள் சேவை தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார் .


அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி:


தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  தாங்கள் நீண்ட ஆயுளுடனும, நல்ல ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு வாழ்ந்து, தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


எல்.கே சுதீஷ்:


தமிழகத்தின் முதல் குரலே !! வாழ்க பல்லாண்டு , நம்  கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.  பிரேமலதா விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில்  மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் ஆனந்தராஜ் மற்றும் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் விஜயகுமார் முன்னிலையில், அக்கட்சியின் கொடி ஏற்றி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு பேனா மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். செட்டிகுளத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்