மும்பை: மும்பையில் பல மொழிகள் உள்ளன என்று ஆர்எஸ்ஆஸ் மூத்த தலைவர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி கூறியதால் அங்கு சர்ச்சை வெடித்துள்ளது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்த, மராத்திதான் மும்பையின் மொழி. அனைவரும் அதை கண்டிப்பாக கற்க வேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்மொழிக் கொள்கை தொடர்பாக தென் மாநிலங்களில் பிரச்சினை வெடித்துள்ள நிலையில் மகாராஷ்டிராவிலும் இதுபோன்ற ஒரு மொழிப் பிரச்சினை கிளம்பியுள்ளது. மூத்த ஆர்எஸ்எஸ் தலைவரான பய்யாஜி, மும்பையில் பல மொழிகள் உள்ளன என்று கூறியிருப்பதற்கு அங்கு எதிர்க்கட்சிகளாக உள்ள உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

முன்னதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜோஷி பேசும்போது கூறுகையில், மும்பைக்கு ஒரு மொழி கிடையாது. அதற்குப் பல மொழிகள் உள்ளன. சில பகுதிகளில் குறிப்பிட்ட மொழி பேசப்படுகிறது. கட்கோபரில் குஜராத்தி பேசப்படுகிறது. கிர்காம் பகுதியில் இந்தியில் பேசுவோர் உள்ளனர். மராத்தியிலும் பேசுகிறார்கள். எனவே மும்பையில் மராத்தி மட்டுமே அவசியம் என்று கூறி விட முடியாது என்று கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து சட்டசபையில் இதுதொடர்பாக முதல்வர் பட்னாவிஸ் விளக்கம் அளித்துப் பேசும்போது, பய்யாஜி சொன்னது குறித்து என்க்குத் தெரியவில்லை. ஆனால் மும்பையின் மொழி மராத்தி, மகாராஷ்டிராவின் மொழி மராத்தி. அனைவரும் மராத்தி கற்க வேண்டும், மராத்தியில் பேச வேண்டும்.
பிற மொழிகளையும் நாங்கள் மதிக்கிறோம். உங்களது மொழியை நீங்கள் மதிப்பீர்கள் என்றால் பிற மொழிகளையும் நேசித்து அதையும் மதிக்க வேண்டும். பய்யாஜி இதை ஏற்பார் என்று நம்புகிறேன் என்று கூறினார் பட்னாவிஸ்.
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}