- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 04 :
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள் :
வீணை,யாழ் போன்ற பலவிதமான இசைக் கருவிகளை கொண்டு ஒருபுறம் இன்னிசை வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறம், உன்னை போற்றி பல விதமான திருநாமங்களால் அடியவர்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள். உன்னை போற்றி பூஜிப்பதற்காக கைகளில் பூமாலைகள் ஏந்தி நிற்பவர் ஒரு புறம் இருக்கிறார்கள். உன்னை வேண்டி தொழுது, கண்ணீர் பெருக வேண்டிடும் அடியாளர்கள் கைகூப்பி வணங்கியபடி ஒரு புறம் இருக்க, திருப்பெருந்துறையில் வீட்டிற்றிருக்கும் சிவ பெருமானே! உன்னனுடைய அடியார்களை போல் என்னையும் ஆட் கொண்டு, உன்னுடைய இனிமையான அருள் வழங்குவதற்காக எங்கள் தலைவானிய பெருமானை தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}