-ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 5:
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள் :
பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களாக மட்டும் இல்லாமல்,நீ எப்படி இருப்பாய் என அறிய முயல்பவர்களின் சிந்தனைக்கு எட்டாத அனைத்துமாக நீ இருக்கிறாய். உன்னை போற்றி பாடும் புலவர்களின் கீதங்களாகவும், அவர்கள் பாடும் பாட்டாகவும், இசையாகவும், ஆடுதலாக மட்டுமில்லால் நீ இப்படித்தான் இருப்பாய், இங்கு தான் இருப்பாய் என எவரும் கண்டறிந்து சொன்னதாக நாங்கள் கேட்டதில்லை. குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் குடி கொண்டிருக்கும் சிவ பெருமானே!உன்னுடைய திருக்காட்சியை கண்டவர் எவரும் இல்லை. அப்படிப்பட்ட நீ எங்கள் முன்பு வந்து, எங்களின் பாவங்களை எல்லாம் தீர்த்து எங்களை ஆட்கொள்ள வேண்டும். எங்களுக்கு உன்னுடைய அருளை வழங்குவதற்காக எங்கள் தலைவனே எழுந்தருள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}