கமல், ரஜினியை தொடர்ந்து.. விஷால்  படத்திற்கும் சொகுசு கார்.. அடடே யாருக்குங்க?

Oct 31, 2023,10:55 AM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: மார்க் ஆண்டனி  படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தயாரிப்பாளர் வினோத் குமார் சொகுசு காரை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்.


இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த படம் மார்க் ஆண்டனி. இந்த படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளிவந்தது. இதில் நாயகியாக ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, அபிநயா, அனிதா சம்பத், ஒய் .ஜி மகேந்திரன், ரெடின் கின்ஸ்லி, நிழல்கள் ரவி, சுனில் போன்ற மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்க, வினோத்குமார் தயாரித்துள்ளார். 


இப்படம் டைம் டிராவல் என்ற பின்னணியில் ஆக்சன் காமெடி கலந்த மசாலா  படமாக  உருவாகி இருந்தது. இயக்குனர் எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதன் மூலம் எஸ் .ஜே சூர்யா நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார். இப்படம் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்று ஹிட் கொடுத்தது. விஷால் கேரியரில் முதல் முறையாக 100 கோடி வசூல் வசூல் சாதனை செய்த படமும் இதுவே.




ஏற்கனவே விக்ரம் படம் வெற்றி பெற்று ரூ. 500 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்தது. இதற்காக  கமலஹாசன் இயக்குனர் லோகேஷ்  கனகராஜுக்கு லக்சஸ் கார் மற்றும் உதவி இயக்குனருக்கு அப்பாச்சி பைக்கை பரிசாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் படம் 600 கோடி வசூலை அள்ளி சாதனை பெற்றது. இதற்காக தயாரிப்பாளர் கலாநிதிமாறன், ரஜினிக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 மாடல் சொகுசு காரையும், இயக்குனர் நெல்சனுக்கு போச்சே காரையும் பரிசாக வழங்கினார்.


இந்நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று  வசூல் ரீதியாக 100 கோடியை எட்டியதைக் கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் வினோத்குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிஎம்டபிள்யூ சொகுசு காரை  ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். 


மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து அடுத்து அஜித்குமார் நடிக்கும் படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாக பரபரப்பான செய்திகள் வெளியாகி வருவது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்