நியூயார்க்: பேஸ்புக் நிறுவனரும், மெட்டா நிறுவனத்தின் செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கபர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்ததால் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, மெட்டா நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.இதனால் ஜூக்கபர்கின் சொத்து மதிப்பு, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ்ஸைவிட 1.1 பில்லியன் உயர்ந்தது. இந்த மெட்டா பங்குகளின் வளர்ச்சிக்கு காரணம் செயற்கை நுண்ணறிவு முதலீடு தான் காரணம் என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

அதன்படி நடப்பு ஆண்டில் மட்டும் மார்க்கின் சொத்து மதிப்பு 78 பில்லியன் டாலர் உயர்ந்தது. அதில் நேற்று மட்டும் மெட்டாவின் ஒரு பங்குகள் 582.77 டாலர்களில் விற்றன. இதனைத் தொடர்ந்து ஒரே நாளில் மார்க் ஜூக்கபர்கின் சொத்து மதிப்பு 343 கோடி டாலர் அளவுக்கு உயர்ந்து, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்கள் வரிசையில், 2 ஆம் இடத்திற்கு முன்னேறினார். அதேபோல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியல் இதோ...
1. எலான் மஸ்க் -256 பில்லியன் டாலர்
2. மார்க் ஜூக்கர்பெர்க் -206 பில்லியன் டாலர்
3. ஜெஃப் பெசோஸ் -205 பில்லியன் டாலர்
4. பெர்னார்ட் அர்னால்ட் -193 பில்லியன் டாலர்
5. லாரி எலிசன் -179 பில்லியன் டாலர்
6. பில் கேட்ஸ் -161 பில்லியன் டாலர்
7. லாரி பேஜ் -150 பில்லியன் டாலர்
8. ஸ்டீவ் பால்மர் -145 பில்லியன் டாலர்
9. வாரன் பஃபெட் -143 பில்லியன் டாலர்
10. செர்ஜி பிரின் -141 பில்லியன் டாலர்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}