திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி தேரோட்ட திருவிழா கோலாகலமாக இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானின் அருளைப் பெற்றனர்.
திருச்செந்தூரில், மாசித் திருவிழா பிப்ரவரி 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா ஆண்டு தோறும் 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இவ்விழாவை முன்னிட்டு தினமும் காலை மாலை என இரு வேலைகளிலும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
ஒன்பதாம் திருநாளில் நேற்று காலை மேலக் கோவிலில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமானும், குமரவிடங்க பெருமானும் தனித்தனி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்திய பின் எட்டு வீதிகளில் உலா வந்து மீண்டும் மேலக்கோவில் சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு மகா தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. முதலில் காலை 7 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு 7. 45 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து 7.48 மணிக்கு சுவாமி குமர விடங்க பெருமான் - வள்ளி, தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளிய பெரிய தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
4 ரத வீதிகளை சுற்றிய பின் தேர் மீண்டும் 8:10க்கு நிலைக்கு வந்தது. இதனை தொடர்ந்து காலை 8.15 மணிக்கு தெய்வானை அம்மன் தேர் வீதி உலா வந்து காலை 9 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.
கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூரில், அதிகாலையிலேயே மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.
11-ம் நாளான நாளை இரவு 10.30 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. 12-ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளிலும் உலா வருகிறார்கள். இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை வந்தடைகிறார்கள்.
விழாவினை முன்னிட்டு திருச்செந்தூரில் பாதுகாப்பு பணியில் போலீசார் போடப்பட்டுள்ளனர். சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}