மகளிர் தினத்தையொட்டி.. ஸ்பெஷல் பார்பி பொம்மைகள்.. விதம் விதமாக தயாரித்த மேட்டல் நிறுவனம்

Mar 07, 2025,10:39 AM IST

லாஸ் ஏஞ்சலெஸ்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒலிம்பிக்கில் வென்ற வீராங்கனைகள், நடிகைகள், வழக்கறிஞர்கள், என ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண்களின் சாதனைகளை கௌரவப்படுத்தும் நோக்கில் விசேஷமான பார்பி பொம்மைகளை வடிவமைத்துள்ளது மேட்டல் நிறுவனம். இது உலக நாடுகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


பெண்களுக்கு பாலின ரீதியாக சம உரிமை அளிக்கும் வகையில் ஊதிய உரிமை, வாக்களிக்கும் உரிமை, போன்ற நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் கடந்த 1910 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி முதல் சர்வதேச மகளிர் தினம் அங்கீகரிக்கப்பட்டது.  


இவ்வுலகில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சம உரிமைகள் பெற்றவர்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த மகளிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பெண்களே நாட்டின் கண்கள் என்ற சிறந்த கொள்கையில் அன்னையாக, சகோதரியாக, தங்கையாக, தோழியாக, மனைவியாக, வலம் பெண்களின் சாதனைகளை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினம் கொண்டாடுவது வழக்கம். 




அந்த வகையில் நாளை உலக மகளிர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், என முக்கிய இடங்களில் பெண்மையை போற்றும் விதமாக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


நாளை கொண்டாடப்பட உள்ள மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் தங்களின் சிறந்த சேவைகளை வழங்குகின்றன. அதில் ஒன்றுதான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள மேட்டல் நிறுவனம்.  இது ஒரு அமெரிக்க பன்னாட்டு பொம்மை தயாரிப்பு மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமாகும்.  


இந்நிறுவனம், குழந்தைகள், பெண்களை, மகிழ்விக்கும், வகையில் பல்வேறு வடிவங்களில்  உடல் வகைகள், தோல் நிறங்கள் மற்றும் பிற பண்புகளைக் கொண்டு உலகின் பன்முகத்தன்மை கொண்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பார்பி பொம்மைகளை உற்பத்தி செய்கிறது. பார்பி பொம்மைகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. கடந்த ஆண்டு கண் பார்வையற்றவர்களின் பண்புகளை தனித்துவப்படுத்தும் வகையில் பார்வையற்ற பார்பி பொம்மைகள் சந்தைப் படுத்தப்பட்டது.


இந்த வருடம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் நட்பை போற்றும் வகையில் லிமிடெட் எடிசன் பார்பி பொம்மைகளை வடிவமைத்துள்ளது மேட்டல் நிறுவனம். குறிப்பாக ஒலிம்பிக்கில் வென்ற வீராங்கனைகள், நடிகைகள், வழக்கறிஞர்கள், என ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண்களின் சாதனைகளை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் பார்பி பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது உலக அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இன்சொல் பேசுவோம்.. இதயம் என்றென்றும் இளமையாக வாழும்!

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

அதிகம் பார்க்கும் செய்திகள்