அன்று ஆட்சியருடன்.. இன்று ஆளுநருடன்.. மாறுவேடத்தில் அசத்தி வரும் யோகஸ்ரீ!

Oct 09, 2025,03:13 PM IST

சென்னை: மயிலாடுதுறையைச் சேர்ந்த வீ.யோகஸ்ரீக்கு ஒரு பெருமை மிகு வரலாறு சொந்தமாகியுள்ளது. ஏதாவது விஐபிக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் அந்த நிகழ்ச்சிக்குரிய கான்செப்ட்டில் அவர்களுடன் மாறு வேடம் போட்டு நடந்து வருவதுதான் அது.


மயிலாடுதுறையில் உள்ள சின்ன எரகலி நகராட்சி தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார் வீ.யோகாஸ்ரீ. அவரது பெருமை குறித்து குறித்து அவரது தாயார் சுகந்தி நமக்கு அளித்த பேட்டியிலிருந்து..


பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு இருந்தே ஒவ்வொரு சிறப்பு நிகழ்வு வரும் போதும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறந்தநாள், நினைவு நாள்  வரும்போதும் அவர்களைப் போல் வேடம் அணிந்து அவர்கள் தியாகத்தையும்,அவர்களின் சிறப்புகளையும் பேசச்சொல்லியும்,குழந்தைகளுக்கான கதைகளை அவற்றில் வரும் கதாபாத்திரங்களாக நடிக்க வைத்தும், ஏதேனும் சிறப்பு நிகழ்வுகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சொல்லி புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பது எனது பொழுதுபோக்காகும்.




விடுதலைப் போராட்ட வீரர்களான காந்தி, நேரு, பாரதியார்,காமராஜர், ஜோதிராவ் பூலே  வ.உ.சி,இந்திரா காந்தி சாவித்திரிபாய் பூலே,வேலு நாச்சியார், ஜான்சி ராணி ,பாரதமாதா, கிட்டூர் ராணி செல்லம்மாள் ,பாரதியின் மனைவி செல்லம்மா, திருவள்ளுவர், ஔவையார் , நம்மாழ்வார் பறவைகளின் மனிதர் சலீம் அலி ,நெல் ஜெயராமன், வள்ளலார், சகோதரி நிவேதிதா,சிவன்,முருகர்  ஆஞ்சநேயர், சரஸ்வதி ,அம்மன்,கிருஷ்ணர் , ராதை போன்ற பல மாறு வேடங்களை அணிந்து பேசி உள்ளார் .


வீட்டிலே ஒவ்வொரு சிறப்பு தினத்திலும் மாறுவேடம் அணிந்து அவற்றைப்பற்றி  பேசி வந்ததால் மாறுவேட போட்டியில் வெற்றி பெற வாய்ப்பாக இருந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற மாறுவேட போட்டியில் 2ம் இடத்தையும், பள்ளி கலைத் திருவிழாவில் மாவட்ட அளவில்  நடைபெற்ற மாறுவேட போட்டியில் 2ம் இடத்தை பெற்றார்.


இயற்கை அன்னையாக அழகாக மாறுவேடம் அணிந்ததால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வரும்போது வரவேற்கும் விதமாக அழைத்துக் கொண்டார்கள். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஐயாவுடன் நடந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியை தந்தது .


உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு என்பதை போல் பள்ளி,  வட்டாரம் ,மாவட்ட அளவில் என ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமாக இயற்கை அன்னையாக வேடமணிய எங்கள் தெருவில் மட்டும் இல்லாமல் பக்கத்தில் உள்ள தெருவிற்குச் சென்று அங்கு உள்ள வித்தியாசமான பூச்செடிகளிலும் அழகு செடிகளில் உள்ள இலை, பூ போன்றவற்றை வாங்கி வந்தும், சாலையில் செல்லும்போது எதார்த்தமாக தென்னை மரம் விழுந்து கிடந்ததால் அவற்றில் உள்ள தென்னம் பூவை பறித்து அதில் பொக்கே செய்து இயற்கை அன்னையாக காட்சியளித்தது மிகவும் சிறப்பாக இருந்தது.




எனது மகள் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைய வழியில் நடத்திய திருவருட்பாவில் உள்ள ஆறு திருமுறைகளையும் படித்து உலக சாதனை செய்துள்ளார் . அருட்பெருஞ்ஜோதி அகவல்  1596 வரிகளை அஞ்சல் அட்டையில் எழுதி My bharath book of world records நிறுவனத்தில் உலக சாதனை படைத்துள்ளார். 


சென்னையில் உள்ள ராஜ்பவன், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற வள்ளலார் நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது . ஆளுநர் அவர்களை வரவேற்க தெருக்கூத்து நாடக கலைஞர்கள் மற்றும் நடன மாணவர்கள் தயாராக இருப்பதை பார்த்து நான் எனது மகளுக்கு உடனடியாக வள்ளலார் மாறுவேடம் அணிவித்து ஆளுநர் அ

வர்கள் வரும்போது அவர்கள் அருகில் நிற்கவைக்க  வேண்டும் என்ற எண்ணம் வந்தது.




"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்"என்ற பழமொழியை போல் ஐந்து நிமிடத்தில் வள்ளலார் மாறுவேடம் அணிவித்து  ஆளுநர் அவர்கள் அருகில் நிற்க வைக்கும் போது பாதுகாப்பு காவலர்கள் தொலைவில் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.


திருவண்ணாமலை வள்ளலார் குழுவின் தலைவர் ஜானகிராமன் அவர்கள் யோகாஸ்ரீ அஞ்சல் அட்டையில் வள்ளலார் அகவல் முழுமையாக எழுதிய தடம்பதிக்கும் தளிர்கள் மாணவி என்பதால் ஆளுநர் அவர்களுடன் நடந்து வர சொன்னார்கள். வள்ளலாரே ஆளுநரை அழைத்து வருவதாக ஒலிபெருக்கியில் கூறினார்கள்.


எனது மகள் ஒரு வருடமாக தடம் பதிக்கும் தளிர்கள் நடத்தும் அனைத்து இணைய வழி  நிகழ்வில் கலந்து கொள்வதாலும் , நானும் தொடர்ந்து ஆறு மாதமாக ஒருங்கிணைப்பாளர் பணி செய்து வருவதாலும் கிடைத்தது என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது. சிலர் இணைய வழி நிகழ்வில் கலந்து கொள்வதால் பயன் ஒன்றும் இல்லை என்று கருதுகிறார்கள் .நேரடி நிகழ்வில் கலந்து கொண்டு விருதுகள் வாங்கினால் தான் சிறப்பாக இருக்கும் என்கிறார்கள் .இது முற்றிலும் தவறு.


இணைய வழி நிகழ்வில் கலந்து கொண்டு பல்வேறு அனுபவங்களை பெற்ற பிறகு நேரடி நிகழ்வில் கலந்து கொள்ளும் போது நம்மால் எளிதில் வெற்றி பெற முடியும் என்பதை உணர முடிகிறது என்றார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வானிலை விடுத்த அலர்ட்.. இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களுக்குனு தெரியுமா?

news

கோவையின் புதிய அடையாளம்... ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

முத்துராமலிங்கத் தேவர் பெயரை நீக்கியவர்கள்.. ஜி.டி. நாயுடு பெயரைச் சூட்டியது ஏன்?.. சீமான் கேள்வி

news

எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

news

யாராவது ஏதாவது செய்து விடலாம் என விஜய் அஞ்சுவது போல தெரிகிறது.. நயினார் நாகேந்திரன்

news

திமுகவில் உறுதியாக தொடர்கிறேன்.. நான் ஏன் தவெகவுக்குத் திரும்ப வேண்டும்.. வைஷ்ணவி

news

சாதி அடையாளங்களை தடை செய்யும் அரசாணையை முதல்வரே மீறக் கூடாது.. ஆ.த.மு.க.

news

மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. தவெக தலைவர் விஜய் வீட்டில் குவிந்த போலீஸ்..!

news

இல்லம் தேடி கல்வி வெற்றி கதை.. ஒரு ஆசிரியையின் நேரடி அனுபவ ரிப்போர்ட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்