சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் 2026ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.
விருப்ப மனு விநியோகம் மற்றும் தாக்கல் :
தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆர்வத்துடன் மனுக்களைப் பெற்று வருகின்றனர். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை இன்று பிற்பகல் 3 மணிக்குள் கட்சியின் அமைப்புச் செயலாளர் சு.குருநாதனிடம் வழங்க வேண்டும் என்று மதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
கட்டண விபரங்கள் :
விருப்ப மனுக்களைப் பெறுவதற்கான கட்டண விபரங்களையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது:
பொதுத் தொகுதிகளுக்கு: ரூ.25,000
தனித் தொகுதிகளுக்கு: ரூ.10,000

இன்று மதியத்திற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் உடனடியாகத் தலைமை நிலையத்தால் ஆய்வு செய்யப்பட உள்ளன. வேட்பாளர்களின் தகுதி, வெற்றி வாய்ப்பு மற்றும் கள நிலவரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும்.
இன்று மாலை வேட்பாளர் பட்டியல் :
விருப்ப மனுக்கள் மீதான ஆய்வு நிறைவடைந்ததும், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் முறைப்படி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக.,விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றின் 3 இடங்களில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு இடத்தில் தனிச் சின்னத்திலும் மதிமுக போட்டியிடும் என வைகோ ஏற்கனவே அறிவித்து விட்டார். திமுக கூட்டணியில் மதிமுக.,விற்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது என இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில் ஒரே நாளில் விருப்பமனுக்களை பெற்று, அவற்றை ஆய்வு செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளதாக மதிமுக தலைமை அறிவித்துள்ளது அக்கட்சி தொண்டர்கள் இடையே குழப்பத்தையும் நெருக்கடியான சூழலையும் ஏற்படுத்தி உள்ளது. இன்று மாலை வெளியாகும் மதிமுக வேட்பாளர் பட்டியலில் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரங்களும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}