Vikravandi: நோட்டாவுக்கு வாக்களிக்கலாமே.. அதிமுகவினருக்கு மதிமுக தலைவர் பகிரங்க அழைப்பு!

Jul 10, 2024,08:53 AM IST

சென்னை: அதிமுகவினர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை  புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் தங்களது வாக்குகளை வேறு யாருக்கும் செலுத்தாமல் நோட்டாவுக்கு செலுத்தி தங்களது தூய்மையை நிலை நிறுத்த வேண்டும் என்று மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சி சத்யா அழைப்பு விடுத்துள்ளார். 


விக்கிரவாண்டிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி என மூன்று முக்கிய கட்சிகள் மோதுகின்றன. இந்த தேர்தலை அதிமுகவும் அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவும் புறக்கணித்து விட்டன. அதிமுகவினர் யாருக்கும் வாக்களிக்க கூடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதேசமயம் அதிமுகவினரின் வாக்குகளை குறிவைத்து பாமக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் கூட அது வாக்கு சேகரிப்பின் போது பயன்படுத்தியது.


இந்த நிலையில் அதிமுகவினர் தங்களது வாக்குகளை வீணடிக்காமலும், வேறு யாருக்கும் செலுத்தாமலும் நோட்டாவுக்கு அளிக்க வேண்டும் என்று மதிமுக மூத்த தலைவர் மல்லை சத்யா கோரிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: 




இன்று 10. 07. 24  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அஇஅதிமுக வாக்குகள் யாருக்கு என்ற கேள்வி விவாதப் பொருளாக மாறி இருக்கும் நிலையில், இத்தேர்தலை புறக்கணிக்கும் பிரதான எதிர் கட்சியான அஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்கள் தொண்டர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று சொல்வது ஜனநாயக விரோத செயல். அதற்கு மாறாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய நோட்டா விற்க்கு வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற முன் வரவேண்டும்.


18 வது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மத்திய பிரதேசம் இந்தூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி பாம், பாஜக வேட்பாளர் சங்கர் லால் வாணிக்கு ஆதரவாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதனால் காங்கிரஸ் பிரதிநிதி இல்லாமல் ஐந்து அரசியல் கட்சிகள் 9 சுயேட்சை வேட்பாளர்கள் என்று 14 பேர் களத்தில் நின்றனர். இதில் யாரையோ ஒருவரை ஆதரிக்காமல் தங்கள் ஆதரவு வாக்காளர்களை நோட்டா விற்கு வாக்களிக்க காங்கிரஸ் பிரச்சாரம் செய்ததில் ஜூன் 04 அன்று வாக்கு என்னும் போது நாட்டிலேயே நோட்டா விற்க்கு அதிக பட்சமாக 2 18 674 வாக்குகள் பெற்றது.

 

அஇஅதிமுக அதைப் பின்பற்றுமா என்று நாடு எதிர் பார்க்கிறது. நோட்டாவில் பதிவாகும் வாக்குகளை வைத்துத்தான் அஇஅதிமுக வின் மீதான சந்தேகப் பார்வை அதன் அரசியல் திசை வழிப் பயணம் என்ன என்பது தெரியவரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

Good touch & bad touch மட்டுமல்ல.. பெண் பிள்ளைகளுக்கு வீரக் கலைகளும் அவசியம்!

news

கல்வி அவளின் அடையாளம்.. தன்னம்பிக்கை அவளின் ஆயுதம்!

news

நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நான் அரசியலையே தொழிலா பண்றவன்...கராத்தே பாபு பட டீசர் வெளியீடு!

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

வீட்டின் வாசலில் நின்றாலும்.. வானம் வரை நீளும் கனவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்