சென்னை: மிச்சாங் புயல் பாதிப்பு ஏற்படுத்திய பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம் டிசம்பர் 14ம் தேதி நடத்த நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மிச்சாங் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. சில இடங்களில் வெள்ள நீர் வீட்டு பகுதிகளில் இன்னும் கூட தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் காய்ச்சல், இருமல்,சளி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பொதுமக்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச முகாம் டிசம்பர் 14 (நாளை மறுநாள் ) நடைபெற உள்ளது. சென்னையை சுற்றி 25 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்படையுமாறு விஜய் மக்கள் இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க மிச்சாங் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகிற 14-12-23 அன்று காலை 8.05 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}